Chewing gum ஐ வைத்து வித்தியாசமான முறையில் பணம் சம்பாதிக்கும் பெண்!

ஜெர்மனியைச் சேர்ந்த ஜூலியா, தனது வாழ்க்கையின் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக புதிய வழியினை கண்டுபிடித்துள்ளார்.

அதுதான் Chewing Gum மென்று அதன் மூலம் bubbles களை உருவாக்குவது. கேட்பதற்கு தலை சுற்றலாம், ஆனால் அதுதான் உண்மை.

ஜூலியா Chewing Gum மென்று அதில் பெரிய bubble களை உருவாக்கி தனது நண்பர்களுக்கு வேடிக்கை காண்பிப்பார்.

ஒரு நாள் அவரது நண்பர் பேசாமல் உனது சூவிங் கம் bubbles ஐ புகைப்படம் எடுத்து விற்றால் என்ன? என்று நகைச்சுவையாக ஜூலியாவிடம் கூற அதனையே லட்சியமாகக் கொண்டு சில முயற்சிகளை மேற்கொண்டார்.

அதன் பிறகு Chewing Gum bubble களை பெரிதாக ஊதி அதனை புகைப்படம் எடுத்து ஆன்லைனில் வெளியிட்டார்.

பிறகு ஜூலியாவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாக , தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் உள்ள ஆதரவாளர்கள் கேட்கும் அளவிற்குப் பெரிய bubbles உருவாக்கி இந்திய மதிப்பில் மாதம் ரூ 67,000 வரை பணம் சம்பாதிப்பதாகக் கூறுகிறார்.

இன்ஸ்டகிராமில் bubbles ஊத சொல்லி வரும் சாவல்கள் தனக்கு பிடித்துள்ளதாகவும், தனது ரசிகர்கள் மிகவும் ஆதரிப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜூலியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *