ஏப்பம் விட்டு கின்னஸ் சாதனைப் படைத்த பெண்!

அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரில் ஏப்பம் விட்டு Kimberly Winter என்ற பெண் கின்னஸ் உலகச் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இத்தாலியின் எலிசா கெக்னொனி (Elisa Cagnoni) 2009ஆம் ஆண்டு அத்தகைய சாதனையைப் படைத்திருந்தார்.

கலக்கும் சாதனம், சில வகை மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றை விட கிம்பர்லியின் ஏப்பம் மிகச் சத்தமாக இருந்ததாக கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு அதன் இணையப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

சத்தமாக ஏப்பம் விடும் தன்மையைச் சிறு வயதிலிருந்தே கண்டறிந்ததாகவும் வயது ஆகஆக சத்தம் அதிகரித்ததாகவும் அவர் சொன்னார்.

பொது இடங்களில் கிம்பர்லி ஏப்பம் விடுவது சிலருக்கு அதிர்ச்சியளிக்கலாம்.

ஆனால், ஏப்பம் விடும் காணொளிகளை TikTok, Facebook ஆகிய தளங்களில் பதிவேற்றிய அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

கிம்பர்லி கின்னஸ் உலகச் சாதனை படைக்க ஊக்கமளித்ததே அவரது ரசிகர்கள்தான் என குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *