பிரித்தானியாவில் இருந்து வெளியேற தயாராகும் 4.5 மில்லியன் மக்கள்!

பிரித்தானியாவில் இருந்து வெளியேறி வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து 4.5 மில்லியன் மக்கள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாழ்க்கைச் செலவு நெருக்கடி காரணமாக சிறந்த தொழில் வாய்ப்புகளுக்காகவும் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்காகவும் நாட்டை விட்டு செல்ல எதிர்பார்த்துள்ளனர்.

பிரித்தானியாவில் 3.4 மில்லியனுக்கும் அதிகமான பணியாற்றும் பெரியவர்களும் நாட்டை விட்டு செல்வது தங்களுடைய நீண்ட கால இலக்கு என்று கூறுகிறார்கள்.

இதேவேளை, 3 சதவீதமானோர் அடுத்த ஆண்டு அல்லது அடுத்த இரண்டு ஆண்டுகளில் தீவிரமாக இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது.

அத்துடன் 380,000 க்கும் மேற்பட்ட பிரித்தானிய தொழிலாளர்கள் உடனடி இடமாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

புதிதாக வெளியாகிய தரவுகளுக்கமைய, 25-34 வயதுடையவர்களில் 17 சதவீதமும் 18-24 வயதுடையவர்களில் 30 சதவீதமானோரும் பிரித்தானியாவை விட்டு விரும்புவதாக தெரியவந்துள்ளது.

விசேடமாக லண்டனில் வசிப்பவர்களிடையே இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளதென தெரியவந்துள்ளது. இந்த நிலைமையான லண்டன் மிகவும் திறமையானவர்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என கூறப்படுகின்றது.

வெளிநாட்டிற்குச் செல்வதைக் கருத்தில் கொண்டதற்கான காரணங்கள் பற்றி கேட்டபோது, பிரதானமாக 4 காரணங்களை முன்வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய, சிறந்த வாழ்க்கைத் தரம் இல்லாமை, அதிகரித்துள்ள வாழ்க்கை செலவு, விரும்பும் துறையில் சிறந்த தொழில் வாய்ப்புகள் இல்லாமை மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்த விரும்புகின்றமையே இதற்கு முக்கிய காரணங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *