முன்னாள் ஜனாதிபதி கோட்டாவிடம் அரசியல் ரீதியான துணிச்சல் இல்லை!

கோத்தாபயவிடம் ஒரு ஷெரீப் அல்லது ஒரு பூட்டோவின் அரசியல் ரீதியான துணிச்சல் இல்லை. அல்லது மீண்டும் ஒருமுறை பரீட்சித்துப் பார்ப்பதற்கு ஒரு முஷாரப் போன்றவரிடம் இருந்த அந்த விடயமும் இல்லை. பாகிஸ்தான் தலைவர்களைப் போலல்லாமல், அவர் இப்போது ஒரு காலத்தில் அவரின் ரசிகர்களாக இருந்தவர்களிடையே கூட வெறுப்பை ஏற்படுத்துகிறார். அவரது புலம்பெயர்ந்த வாழ்க்கையும் சௌகரியமானதாக இருக்காது. லண்டனில் ஷெரீப் வைத்திருப்பது போல் அவரால் ஆதரவாளர்கள், உதவியாளர்களை நிச்சயமாக, கொண்டிருக்க முடியாது. போர்க் குற்றங்களுக்காக அவர் தண்டிக்கப்படுவதை புலம்பெயர் தமிழர்கள் விரும்பலாம். முஷாரப்பைப் போலவே, அவரும் ஒரு மோசமான நினைவு போல் மறக்கப்படுவார் என்று நம்பலாம் அல்லது அவர் இலங்கையில் விட்டுச் சென்ற குடும்பத்தின் மூலம் காப்பீட்டைக் கண்டுகொள்வார் என்று கருதலாம் – சகோதரர்களும் சிரேஷ்ட அரசியல்வாதிகளான மகிந்த, சமல் மற்றும் அடுத்த தலைமுறை ராஜபக்ஷாக்கள், பிலிப்பைன்ஸில் மார்கோஸின் அடுத்த தலைமுறையினரின் மீள்வருகையைப் பற்றி ஆய்வு செய்கிறார்கள்.

கோத்தபாயவை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் சவுதியா விமானம் ஜூலை 14ஆம் திகதி சிங்கப்பூரை சென்றடைந்தது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதி தலிபான்கள் காபூலில் நுழைந்த பின்னர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு, ஜனாதிபதி அஷ்ரப் கானி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வெளிப்பட்டார் .கிட்டத்தட்ட பதினொரு மாதங்களுக்குப் பிறகு, இலங்கையின் கோத்தபாய ராஜபக்ஷ தனது நாட்டை விட்டு வெளியேறிய இரண்டாவது தெற்காசியத் தலைவரானார் . மாலைதீவில் 36 மணி நேரம் தரித்து நின்ற பிறகு அவர் கிழக்கு நோக்கி சிங்கப்பூருக்கு செல்வதை தேர்வு செய்தார்.

அஞ்ஞாதவாசத்தை நாடும் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக நினைவுக்கு வரும் முதல் நாடு சிங்கப்பூர் அல்ல. “மனிதாபிமான அடிப்படையில்” கானியை வரவேற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸைப் போலல்லாமல், நகர-தேசமான சிங்கப்பூரின் அரசாங்கம் ராஜபக்ஷ தரையிறங்கியவுடன் அதனது அசௌகரியத்தை வெளிப்படுத்துவது போல் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டது. “பொதுவாக சிங்கப்பூர் புகலிடக் கோரிக்கைகளை வழங்குவதில்லை” என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. அல்லது ராஜபக்ஷவும் அதனைக் கேட்டிருக்கவில்லை. அவர் தனிப்பட்ட ரீதியில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்.

தலைவர்கள் அஞ்ஞாதவாசத்தை நாடும்போது​​அவர்கள் எங்கே செல்ல வேண்டுமென்ற இடத்தை ஏன் தெரிவு செய்ய விரும்புகிறார்கள்? இந்தக் கேள்வி அறிவு ரீதியான ஆய்வுக்கு சுவாரஷ்யமாக இருக்கிறது. அபெல் ஏசுகிரிப் `எ -போல்ச் மற்றும் டானியல் கிரகிமாறிக் ஆகியோர் (ஜேர்னல் ஒவ் பொலிடிக்ஸ் தொகுதி 79, இலக்கம் 2, 2017) 1945 மற்றும் 2008 க்கு இடையில் தப்பியோடிய 98 ‘எதேச்சாதிகாரிகளின்’ இடங்களை ஆய்வு செய்தனர். மூலோபாய கூட்டாளிகள், முன்னாள் காலனியாளர்கள் , முக்கியமான வர்த்தகப் பங்காளிகள் அல்லது அயலவர்கள் போன்ற நாடுகளாகவே அவை அநேகமாக இருந்ததைக் கண்டுகொண்டனர். ஒரு சதித்திட்டத்தைப் போல, திடீரென்று வெளியேற்றப்பட்டவர்களுக்கு , இது போன்ற சந்தர்ப்பங்களில் முன்கூட்டியே திட்டமிடுதல் சாத்தியமில்லை.

பெரும்பாலானவர்கள் ஜனநாயகத்தை நாடுவது குறைவு. மேலும் பல நாடுகள் இப்போது விரும்பத்தகாத கதாபாத்திரங்களுக்கு பாதுகாப்பான புகலிடத்தை அளிப்பதில் தங்கள் நம்பகத்தன்மையைப் பற்றி கவலைப்படுவதால் அந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஆனால் இங்கு விடயம் இதுதான்: எழுத்தாளர்களின் கூற்றுப்படி, அத்தகைய தலைவர்கள் எவ்வளவு விரைவாக பாதுகாப்பான புகலிடத்தைக் கண்டறிகிறார்களோ, அவ்வளவுக்கு உள்நாட்டில் அமைதியான மாற்றத்துக்கான வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் செல்வாக்கு மிக்கவர்கள் பாதுகாப்பான முறையில் சென்றடைவதை கண்டறிய தங்கள் வலிமையைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு ஏசுகிரிப் `எ -போல்ச் மற்றும் டானியல் கிரகிமாறிக் ஆகியோர் சிரியாவின் உதாரணத்தை வழங்குகிறார்கள், அங்கு 2012 ஆம் ஆண்டின் இறுதியில், ஜனாதிபதி பஷார் அல்-அசாத் வெளியேறுவார் என்று நம்பப்பட்டதுடன் அதற்கான “ஒரு வழியைத் தேடுவதாக” கூறப்பட்டது.

அசாத்துக்கு அஞ்ஞாதவாசத்துக்கான இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான இராஜதந்திரப் போராட்டம் தோல்வியடைந்தது. ஐரோப்பிய சக்திகள் அவரை ஏற்றுக்கொள்ள “வழி இல்லை” என்று கூறின. “நம்பகரமான முறையில் வெளியேறுவதற்கான தெரிவு” இல்லாததால், “அசாத் எதிர்பாராத விதமாக மோதலைத் தொடர முடிவு செய்தார்” என்று எழுத்தாளர்கள் வலியுறுத்துகின்றனர், இது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

த வாஷிங்டன் போஸ்டில் கருத்துருவாக்க எழுத்தாளர் ஒருவர் , சிரியாவின் தலைவிதியை துனிசியாவுடன் வேறுபடுத்திப் பார்க்கிறார். அங்கு சர்வாதிகாரி ஜைன் அல்-அபிடின் பென் அலி சவுதி அரேபியாவுக்கு விரைவாகத் தப்பிச் சென்று, தனது நாட்டில் அமைதியான மாற்றத்தை ஏற்படுத்தினார்.

“பெரும் வல்லரசுகளுக்கிடையில் ” ஒரு பினாமி போராக இருக்கும் ஒரு மோதல்,வெளியேறுவதை அனைவருக்கும் சிக்கலாக்குகிறது. கோத்தபாயவின் விடயம் தெளிவாக உள்ளது. எதிர்ப்பாளர்கள் அவரது இல்லத்தை முற்றுகையிட்ட தினமான ஜூலை 9 அன்று, தான் ஒருபோதும் பதவிக்குத் திரும்ப முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும் அவர் நான்கு நாட்களை- ஜூலை 13 ஐ – தனது இராஜினாமாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் . அன்றைய தினம் அவர் இலங்கையை விட்டு மாலைதீவுக்குச் சென்றிருந்தார். ஆனால் அவர் பதவி விலக மறுத்துவிட்டார், பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிக்கும் வரை ஜனாதிபதிக்கான தனது சிறப்புரிமையை விட்டுவிடத் தயங்கினார்.

மாலைதீவு சபாநாயகர் முகமது நஷீட் , அவரே அல்லது பெரிய கதாபாத்திரங்களின் வேண்டுகோளின் பேரில் கோத்தாபய வெளியேறுவது தொடர்பாக குறிப்பிடத்தக்க வகிபாகத்தைக் கொண்டிருந்தார். ஜூலை 14 அன்று ஒரு டுவீட் மூலம் ஊக்குவிப்பு கோட்பாட்டை நன்றாகக் பற்றிக்கொண்டிருந்தார் – வெளியேறி ராஜபக்ஷ சிங்கப்பூரில் இறங்கிய பிறகு இதனை டுவீட் செய்திருந்தார் : “ அவர் இன்னும் இலங்கையில் இருந்திருந்தால், தனது உயிரை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் ஜனாதிபதி பதவி விலகியிருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். மாலைதீவு அரசாங்கத்தின் சிந்தனைமிக்க நடவடிக்கைகளை நான் பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கோத்தபாய சிங்கப்பூரில் இருப்பாரா அல்லது வேறு வழிகளைத் தேடுகிறாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேற்கு ஆசியா, குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா, இ த்தகைய தலைவர்களுக்கு விருப்பமான இடமாக இருந்து வருகிறது.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமரான தக்சின் ஷினவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு டுபாயை தேர்வு செய்தார். 1998 இல், பெனாசிர் பூட்டோ டுபாயிலிருந்து திரும்பி வந்தார். இராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரப்பின் ஆட்சிக் கவிழ்ப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட நவாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவுக்குச் சென்றார். அதேவேளை 2016 இல் ஜனநாயக ரீதியாக ஷெரீப் அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து தப்பி ஓடிய காலம் தொடக்கம் முஷாரப் டுபாயில் வசித்து வருகிறார்.

செல்வாக்கு மிக்கவர்களுடன் தனிப்பட்டஉறவுகளைக் கொண்டிருப்ப தற்கு இது நிச்சயமாக உதவுகிறது. ஒரு வருட சிறைவாசத்துக்குப் பிறகு 2000 ஆம் ஆண்டின் இறுதியில் பாகிஸ்தானில் இருந்து ஜெத்தாவுக்கு ஷெரீப் வெளியேறிசெல்வதற்கு லெபனான் தலைவர் ரஃபிக் ஹரிரி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

சர்வாதிகாரிகளைப் போலல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தாயகம் திரும்புவதற்கான தவிர்க்க முடியாத ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதாகத் தோன்றுகிறது. பெறுபேறுகள் கலவையானவை. கானி இதயத்தில் அரசியல்வாதி இல்லை. எனவே அவர் இதை முயற்சிக்காமல் இருக்கலாம். ஆனால் பூட்டோ 2007 இல் நாடு திரும்பினார், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க இடைநடுவர்களால் தயாரிக்கப்பட்ட முஷாரப்புடனா ன ஓர் ஒப்பந்தத்தால் ஈர்க்கப்பட்டார், ஆனால் அவரது படுகொலைக்கு பல வழிகளில் தளர்வான தன்மைகள் இருந்தமை முன்கூட்டியே கூறப்பட்டிருந்தது.

இராணுவ ஆட்சியிலிருந்து பாகிஸ்தான் மாறும் போது ஷெரீப்பும் 2007 செப்டம்பரில் திரும்ப முடிவு செய்தார். அவரது விருப்பமில்லாத முஷாரப்பால் சடுதியான முறையில் நாடு கடத்தப்பட்டார். அத்துடன் சவூதி மற்றும் ஹரிரியின் மகன் சாத்தினால் (ரபிக் 2005 இல் இறந்தார்) இரகசியமான “அவரது அஞ்ஞாதவாசத்தின் விதிமுறைகளை” மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார் . (பல வருடங்கள் கழித்து ஷெரீப் எந்த ஒப்பந்தத்தையும் மீறவில்லை என்றுஅதே சவுதிகள் விக்கிலீக்ஸ் மூலம் அமெரிக்கர்களிடம் கூறியமை தெரியவந்தது). பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உதவியுடன், 2007 இன் பிற்பகுதியில் ஷெரீப் மீண்டும் நாடு திரும்பினார். ஒரு தசாப்தத்துக்குப் பின்னர் , “நீதித்துறை சதி”யில் நீக்கப்பட்டு, பல மாதங்கள் சிறையிலிருந்த பிறகு, ஷெரீப் மீண்டும் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார். மீண்டும் திரும்பி வருவதற்கான நம்பிக்கையை அவர் இன்னும் கைவிடவில்லை.

ஒரு ஷெரீப் அல்லது ஒரு பூட்டோவின் அரசியல் ரீதியான துணிச்சல் கோத்தாபயவிடம் இல்லை. அல்லது மீண்டும் ஒருமுறை பரீட்சித்துப் பார்ப்பதற்கு ஒரு முஷாரப் போன்றவரிடம் இருந்த அந்த விடயமும் இல்லை. பாகிஸ்தான் தலைவர்களைப் போலல்லாமல், அவர் இப்போது ஒரு காலத்தில் அவரின் ரசிகர்களாக இருந்தவர்களிடையே கூட வெறுப்பை ஏற்படுத்துகிறார். அவரது புலம்பெயர்ந்த வாழ்க்கையும் சௌகரியமானதாக இருக்காது.

நிச்சயமாக, லண்டனில் ஷெரீப் வைத்திருப்பது போல் அவரால் ஆதரவாளர்கள் ,உதவியாளர்களைக் கொண்டிருக்க முடியாது. போர்க் குற்றங்களுக்காக அவர் தண்டிக்கப்படுவதை புலம்பெயர் தமிழர்கள் விரும்பலாம். முஷாரப்பைப் போலவே, அவரும் ஒரு மோசமான நினைவு போல் மறக்கப்படுவார் என்று நம்பலாம் அல்லது அவர் இலங்கையில் விட்டுச் சென்ற குடும்பத்தின் மூலம் காப்பீட்டைக் கண்டுகொள்வார் என்று கருதலாம் – சகோதரர்களும் சிரேஷ்ட அரசியல்வாதிகளான மகிந்த , சமல் மற்றும் அடுத்த தலைமுறை ராஜபக்ஷாக்கள், பிலிப்பைன்ஸில் மார்கோஸி ன் அடுத்த தலைமுறையினரின் மீள்வருகையைப் பற்றி ஆய்வு செய்கிறார்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *