இலங்கையில் முதல் முறையாக electric hybrid system வகை கப்பல் நிர்மாணம்!

கொழும்பு கப்பல் கட்டுமான நிறுவனத்தினால் கப்பல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  

Colombo Dockyard PLC (CDPLC) என்ற நிறுவனத்தின் இலங்கைத் தயாரிப்பில்  electric hybrid system என்ற வகையில் இந்த கப்பல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இது கிட்டத்தட்ட  293 அடி நீளம் கொண்டதாக இருக்கும்,  5000 DWT சுமை திறன் கொண்ட  தானியங்கள், மரங்கள், கொள்கலன்கள் உள்ளிட்ட சரக்குகளை  தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

கப்பல் கட்டும் தளங்களில் இருந்து புதுமையான கப்பல் வடிவமைப்புகளை நிர்மாணிப்பதற்காக நோர்வே நாட்டுக் கப்பல் உரிமையாளர் ஒருவர் கடந்த ஆண்டில் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

வடிவமைப்பு Wartsila Ship Design Norway AS நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது மற்றும் விரிவான உருவாக்கல் பணிகளை கொழும்பு கப்பல்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. 

இவ்வாறு ஆறு   electric hybrid system கப்பல்கள் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  

அடுத்தடுத்த கப்பல்கள் நான்கு மாத இடைவெளியில் கட்டி விநியோகிக்கப்படும்.  

Misje Eco Bulk AS என்பது Kåre Misje & Co. இன் முழு  சொந்தமான துணை நிறுவனமாகும், இது நோர்வே நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *