மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் கோட்டாவின் இராஜினாமா நாடகம் இன்றுடன் முடியுமா?

மாலை தீவுகளின் நேரம் முற்பகல் 11:30 இற்கு கோட்டா தனியார் Jet விமானம் மூலம் சிங்கப்பூர் செல்ல ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று சிங்கப்பூர் Airlines விமானத்தில் செல்லவிருந்த கோட்டா சில காரணங்களால் அந்த பயணத்தை தவிர்த்ததாகவும் அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் ஆயுதங்களுடன் விமானத்தில் board ஆவதற்கு சிங்கப்பூர் Airlines மறுத்ததாகவும் செய்திகள் வந்தன.

தற்போதும் கோட்டா இலங்கை ஜனாதிபதி என்ற பதவி மூலம் கிடைக்கும் Diplomatic immunity இனை பாவித்துக்கொண்டு அரச கெளரவத்துடன் நாடு நாடாக பறந்து திரிகிறார், மாத்திரமல்ல இதற்குண்டான அனைத்து செலவுகளும் நமது தலைகளில்தான் கட்டவும் படுகின்றன.

மாலைதீவுகளின் தங்கிய அதி உயர்ந்த resort இற்கான செலவு , private Jet இற்கான செலவு உட்பட தப்பியோட தொடங்கிய நாள் முதல் ஏற்படும் செலவுகள் இன்னும் ஜனாதிபதி என்ற பதவியோடு செய்யப்போகும் அனைத்து செலவுகளுமே அரச செலவாகவே எழுதப்படுகின்றன!

இந்த தப்பியோட்டத்திற்கு முதலும் செலவிட்ட அத்தனை கோடிகளும் பதவி துறந்த பின் வாழப்போகிற வாழ்விற்கான அத்தனை வசதிகளும் நமது பணம், நம் தேசத்தின் பணம் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள்.

சிங்கப்பூர் செல்லும் தனியார் விமானம் ஏதேனும் கோளாறுகளால் இந்து சமுத்திரத்தில் விழுந்துவிடாமலிருக்க பிரார்த்திப்போம்.

ஏனென்றால் அவ்வளவு விரைவாக கோட்டாவிற்கு சாவு வந்து விடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *