105 வயதில் 100 மீட்டர் ஓடி சாதனைப் படைத்த பாட்டி!

குஜராத்தில் உள்ள வடோதரா நகரில் முதியவர்களுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தேசிய அளவிலான இந்தப் போட்டியில் 85 வயதைத் தாண்டியவர்கள் கலந்துகொள்ளலாம்.

அரியானாவைச் சேர்ந்த ரம்பை என்ற பாட்டி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு முதல் பரிசைத் தட்டியிருக்கிறார். அவரது வயது 105.

85 வயதைத் தாண்டியவர்கள் யாரும் போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்பதால் ரம்பை மட்டுமே தனியாக ஓடவேண்டிய நிலை. பந்தய தூரத்தை 45.40 நொடிகளில் கடந்து சாதனை படைத்திருக்கிறார்.

ஆம்; இனிமேல் இந்தியாவில் 100 மீட்டர் தூரத்தை விரைவாகக் கடந்த அதிக வயதுடையவர் ரம்பைதான்.  இதற்கு முன் 2017ம் வருடம் கவுர் என்பவர் 100 மீட்டர் தூரத்தை 74 நொடிகளில் கடந்தார். பந்தயத்தில் கலந்துகொள்ளும்போது அவரது வயது 101. மட்டுமல்ல, 200 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடம், 52.17 நோடிகளில் கடந்து அசத்தியுள்ளார். ரம்பைக்கு நாலாப்பக்கம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *