250 கின்னஸ் சாதனைகளைப் படைத்த நபர்!

கின்னஸ் சாதனையாளர்கள் எப்போதுமே விசித்திர முயற்சிகளை மேற்கொண்டவாறு இருப்பர். அதிக கின்னஸ் சாதனைகளை படைப்பவர்களுக்கு புதிது புதிதாக சிந்தித்து, கின்னஸ் சாதனை படைக்கவே நேரம் இருக்காது. அப்படி ஒரு நபர் தான் இப்போது 250 கின்னஸ் சாதனைகளை படைத்திருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்ற நபர் தனது தலையில் கிட்டாரை வைத்து 5.4 கிலோமீட்டர் தூரம், அதை நழுவாமல் கவனித்து நடந்து புதிய கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். இது இவருடைய 250வது சாதனை.

இந்த சாதனையைச் செய்வதற்கு டேவிட்க்கு ஒரு மணிநேரம் 7 நிமிடங்கள் ஆகியிருக்கிறது.

இந்த சாதனையை அவர் பகல் பொழுதில் மேற்கொண்டதால் அவருக்கு கண்கள் கூசியிருக்கிறது. தலையை வெகு நேரம் நிமிர்த்தி வைத்திருந்ததால் மயக்கம் வரும் அபாயமும் இருந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கடந்து தொடர்ந்து நடந்தபோது அவரது கிட்டார் ஓரிடத்தில் கீழே விழுந்தது. அப்போது அவரால் நிற்க கூட முடியாமல் அப்படியே படுத்துக்கொண்டார

கடந்த வாரம் டேவிட் 59 மார்ஷ்மெல்லொக்களை தொடர்ந்து வாயால் கேட்ச் பிடித்து ஒரு சாதனையைப் பதிவு செய்தார்.

கடந்த 2017ம் ஆண்டு 5 நிமிடம் 1 வினாடிக்கு ரம்பத்தை தலையில் பேலன்ஸ் செய்து ஒரு சாதனையைச் செய்திருந்தார் டேவிட். இதனை வேறு ஒரு நபர் 6 நிமிடம் 48 வினாடிக்கு செய்து முறியடித்தனர்.

தனது சாதனையை திரும்ப பெற வேண்டும் என நினைத்த டேவிட் கடந்த மாதம் 31 நிமிடம் 25 வினாடிகள் ரிக்‌ஷாவை தலையில் பேலன்ஸ் செய்து சாதனைப் படைத்தார்.

இது போல 250 சாதனைகளை செய்துள்ளார் டேவிட். ஆஷ்ரிடா ஃபர்மன் என்ற மற்றொரு நபர் 600க்கும் மேற்பட்ட சாதனைகளை செய்து அதிக கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்ற சாதனையை சொந்தமாக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *