யானைக்கு தோல் செருப்பு!

நெல்லையப்பர் கோவில் யானை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் , யானைக்கு ரூ.12,000 மதிப்பில் தோல் செருப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கால் வலியால் யானை அவதியுறாமல் இருக்க பக்தர்கள் ரூ.12,000 மதிப்புள்ள 4 தோல் செருப்புகளை வழங்கியுள்ளனர்.

எடை அதிகமான யானை

திருநெல்வேலி நகர்ப்‌ பகுதியில்‌ உள்ள 2000 ஆண்டுகள்‌ பழமை வாய்ந்த நெல்லையப்பர்‌ கோவில் யானையின் பெயர் காந்திமதி. 13 வயதில் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட இந்த யானைக்கு தற்போது 52 வயது ஆகிறது.

இநிலையில் சமீபத்தில் உடல்நலைக்குறைவு காரணமாக யானை பரிசோதித்த மருத்துவ குழுவினர், யானை வயதுக்கேற்ற எடையை விட 300 கிலோ அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் எடையை குறைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்திடம் அறிவுறுத்தினர்.

என்னது யானைக்கு செருப்பா? விலை எவ்வளவு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீ்ங்க | Leather Sandals Worth Rs12000 Elephant

கால்வலியால் அவதி

இதனால் நாள்தோறும்‌ யானையை நடைபயிற்சி அழைத்துச்‌ செல்வது, அதிக இனிப்பு உள்ள கரும்பை குறைவாக கொடுப்பது, நார்ச்சத்து மிகுந்த உணவு அதிகம்‌ கொடுப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்‌ உணவு கட்டுப்பாடு மற்றும்‌ பயிற்சிகளை மெற்கொண்டதில், யானை 6 மாதத்தில்‌ சுமார் 150 கிலோ எடை குறைந்துள்ளது. தற்போது யானை சரியான எடையை அடைந்திருந்தாலும்‌, வயது முதிர்வின்‌ காரணமாக மூட்டு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்‌ யானை நீண்ட நேரம்‌ நடப்பதற்கும்‌, நிற்பதற்கும்‌ முடியாமல் சிரமப்படுகிறது.

என்னது யானைக்கு செருப்பா? விலை எவ்வளவு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீ்ங்க | Leather Sandals Worth Rs12000 Elephant

12 ஆயிரம் ரூபாயில் செருப்பு

எனவே நடக்கும் போது கால் வலி ஏற்படாமல் இருக்க, யானை காந்திமதிக்கு மருத்துவ குணம்‌ வாய்ந்த ரூபாய்‌ 12,000 மதிப்பிலான தோல்‌ செருப்பை செய்த பக்தர்கள்‌ வழங்கியுள்ளனர்.

மேலும் மூட்டு வலியிலிருந்து தப்பிக்கவும்‌ மருத்துவ குணம் கொண்ட செருப்பு உதவியாக இருக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?us_privacy=1—&client=ca-pub-3603232726550318&output=html&h=280&adk=3417100113&adf=3008535365&pi=t.aa~a.3987527503~i.14~rp.4&w=372&fwrn=7&fwrnh=100&lmt=1656814983&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6192759585&psa=1&ad_type=text_image&format=372×280&url=https%3A%2F%2Fmanithan.com%2Farticle%2Fleather-sandals-worth-rs-12-000-elephant-1656768157&fwr=0&pra=3&rh=310&rw=372&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1656814981755&bpp=24&bdt=5679&idt=-M&shv=r20220629&mjsv=m202206280101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D99f8bc6e4aec0a33%3AT%3D1629559664%3AS%3DALNI_MZTMVHXTY8palFBgou1bHmATW-syA&gpic=UID%3D0000049b646a59bd%3AT%3D1649348252%3ART%3D1656814980%3AS%3DALNI_MZPUNk1nZthGpK8Ufqm6TCZ623GEw&prev_fmts=0x0&nras=2&correlator=8055774975563&frm=20&pv=1&ga_vid=1243847086.1629559656&ga_sid=1656814980&ga_hid=1393460120&ga_fc=1&ga_cid=1391044387.1656742587&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_sd=1.75&dmc=2&adx=20&ady=2344&biw=412&bih=787&scr_x=0&scr_y=251&eid=44759875%2C44759926%2C44759837%2C31065544%2C31067528%2C31068288%2C42531606%2C31065825&oid=2&pvsid=2438353302534681&tmod=1035830348&uas=3&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=9&uci=a!9&btvi=1&fsb=1&xpc=VKXhG2g2Ya&p=https%3A//manithan.com&dtd=1439

தமிழகத்திலேயே நெல்லையப்பர்‌ காந்திமதி அம்மன்‌ கோயில்‌ யானைக்குதான்‌ முதல்‌ முதலாக செருப்பு அணிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *