சீனாவால் மிகப்பெரும் இழப்பை சந்தித்துள்ள அமெரிக்கா!

நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு ஏர்பஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திடம் இருந்து சீன நாட்டைச் சேர்ந்த பிரபலமான 3 நிறுவனங்கள் விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

அதன்படி 292 விமானங்களை 37 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கு தீர்மானம் போடப்பட்டுள்ளது. இந்த விமானங்களை சீனாவைச் சேர்ந்த Shenzhen Airlines And China eastern, Air China, China Southern ஆகிய நிறுவனங்கள் வாங்க இருக்கிறது.

இதன் காரணமாக அமெரிக்க நாட்டில் உள்ள போயிங் நிறுவனம் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. 

ஏனெனில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்று வரும் நிலையில் சீன நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் பல மில்லியன் டாலருக்கு ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து விமானங்களை வாங்கியுள்ளது போயிங் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது. 

இதன் காரணமாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *