திருமணத்திற்கு பிறகு கணவர் ‘பெண்’ என கண்டுப்பிடித்த காதலி!

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்லி கேள்விப்பட்டு தான் நாம் வளர்ந்திருக்கிறோம். அதை ஒரு திருவிழா போல நம் வீடுகளில் கொண்டாடினாலும், பல தரப்பட்ட டிடெக்டிவ் வேலைகளை செய்து கல்யாணங்கள் நடந்தாலும், எங்காவது ஒரு இடத்தில் ஏதாவது ஒரு விஷயத்தை நாம் விட்டிருப்போம்

இந்த விடப்பட்ட விஷயங்களினால் உடைந்துபோன பந்தங்கள் ஏராளம். அப்படி ஒரு சோகம் தான் இந்தொனேசியாவில் நடந்திருக்கிறது.

திருமணமான 10 மாதங்களுக்கு பிறகு, தன் கணவர் ஒரு பெண் என்ற அதிர்ச்சிகர உண்மையை அறிந்துள்ளார் இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு பெண். மேலும் இந்த உண்மை தெரிந்த பிறகு, அவரை தப்பிக்க விடாமல் வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளார் இவரை மணமுடித்த பெண்.

இந்தோனேசியாவை சேர்ந்த 22-வயது பெண் ஒருவர் தான் மணம் முடித்து 10 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்த தன் கணவர் உண்மையில் ஒரு பெண் என்று அறிந்துகொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது

கடந்த மே 2021ல், ஒரு டேட்டிங் ஆப் மூலமாக தான் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். அந்த செயலியில், தான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் என்றும் தனக்கு தொழிலில் நல்ல வரவேற்பும் வருமானமும் உள்ளதாக பதிவிட்டிருந்தார் கணவர்.

கொஞ்ச நாட்களுக்கு டேட் செய்த பிறகு, இருவருக்குள்ளும் காதல் மலரவே, இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். ஆனால், திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான எந்த ஆவணத்தையும் கணவர் ஒப்படைக்கவில்லை. எனினும், மகளின் சந்தோஷத்திற்காகத் திருமணம் செய்துவைக்கப்பட்டது.

திருமணமான புதிதில் அந்த பெண்ணின் வீட்டிலேயே தம்பதியினர் தங்கியிருந்துள்ளனர். ஆனால் திருமணமான முதல் நாளிலிருந்தே கணவரும், அவரது குடும்பத்தினரும் மனைவி வீட்டாரிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.

சிறிது காலம் கழித்து தனியே South Sumarta-விற்கு குடிபெயர்ந்து விட்டனர் தம்பதியினர். இதன் பிறகு தான் கணவரின் சித்திரவதைகள் அதிகரித்துள்ளது. மனைவியை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைப்பது, அவரது குடும்பத்தினர், நண்பர்களுடன் பேச விடாமல் அலைப்பேசியைப் பறித்து வைப்பது போன்ற கொடுமைகளை செய்துள்ளார்.

ஒரு முறை, அந்த பெண்ணின் கணவர் தனக்கு நீச்சல் தெரியாது என்று தெரிந்துக்கொண்டே, தன்னை நதியில் குதிக்க சொல்லி வற்புறுத்தியதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு தங்கள் மகளிடம் தொடர்புகொள்ளவிடாமல் கொடுமை படுத்தவே, காவல்துறையில் புகாரளித்த பெண் வீட்டார், நடத்திய விசாரணையில் தான் திடுக்கிடும் உண்மை ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது, இத்தனை நாட்களாக, அவரது மகளின் கணவர் என்று சொல்லிவந்தது ஒரு பெண். Con Artist ஆன இவர், ஆண் போல வேடம் தரித்து இவர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார்.

தி மிரர் பத்திரிக்கையின்படி, அந்த பெண் மொத்தம் 15 லட்சம் ரூபாய் ( IDR300 million) மோசடி செய்துள்ளார். ஜம்பி மாவட்ட காவல் துறையின் உதவியோடு தங்களது மகளை குடும்பத்தினர் மீட்டுள்ளனர். மேலும் ஆண் போல வேடமிட்டு ஏமாற்றிய அந்த பெண்ணையும் கைது செய்துள்ளனர்

இந்தோனேசியாவின் ஜம்பி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *