செய்திகளை வாசிப்பதாலும் பார்ப்பதாலும் மன வருத்தம்-ஊடகங்களை தவிர்க்கும் மக்கள்!

உலக மக்கள் செய்தி ஊடகங்களைத் தவிர்க்கின்றனர் என்று Reuters நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் மோசமான நிலையால் அதிகமான மக்கள் இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.

கொரோனா தொற்று, ரஷ்யா – உக்ரேன் போர், விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்கள் செய்தியில் காட்டும் ஆர்வம் குறைந்து வருவதாகப் பிரித்தானிய ஆய்வுக் குழு ஒன்று கண்டறிந்துள்ளது.

செய்தியைத் தவிர்ப்போரின் எண்ணிக்கை 29 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

செய்தி படிப்பதால் மன வருத்தம் ஏற்படுவதாக இளைஞர்கள் தெரிவித்தள்ளனர்.

ஆனால் கொரோனா அரசியல் போன்றவை பற்றி மீண்டும் மீண்டும் செய்திகள் இடம்பெறுவதே அவற்றைத் தவிர்ப்பதற்கான முக்கிய காரணங்களாகக் கண்டறியப்பட்டன.

செய்தியைப் படிப்பதால் தேவையற்ற வாதங்கள் ஏற்பட்டதாகச் சிலர் கூறினர். செய்தியைப் புரிந்துகொள்வதற்குக் கடினமாய் இருப்பதாகவும் பல இளைஞர்கள் தெரிவித்தனர்.

ஆய்வு நடத்தப்பட்ட பாதி நாடுகளில், ஊடகங்கள் மீதான நம்பிக்கை குறைந்திருப்பதாகவும் அறிக்கை கூறியது.

இக்கண்டுபிடிப்புகள் செய்தித்துறைக்குச் சவாலாய் அமைந்துள்ளதாக முன்னணி எழுத்தாளர் நிக் நியூமன் (Nic Newman) தெரிவித்துள்ளனர்.

அரசியல் நெருக்கடிகள், அனைத்துலகச் சர்ச்சைகள், உலகளாவிய  கொரோனா தொற்று எனச் செய்தியாளர்கள் மிக முக்கியமானதாகக் கருதும் தலைப்புகளே செய்தி மீதான மக்களின் கவனத்தைக் குறையச் செய்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *