அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு எதிராக வழக்கு தாக்கல்!

பம்பலப்பிட்டியில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் சிவில் அமைப்பொன்றினால் .இன்று (06) திங்கட் கிழமை அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்று பதியப்பட்டது. சிவில் அமைப்புக்களின் பிரநிதிகளான ஹில்மி அஹமட், திருமதி சிரானி ஜெயவா்த்தன. மொஹமட் பிஸ்ரி கஸ்சாலி, திருமதி தஸ்லீமா தஹலான், மற்றும் சாம் நவாஸ் ஆகியோா்கள் இணைந்து சிரேஸ்ட சட்டத்தரணி சிராஸ் நுாா்தீன் அவா்களின் அனுசரனையுடன் இவ் அடிப்படை வழக்கினை தாக்குதல் செய்துள்ளனா்.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி காலிமுகத்திடல் வன்முறையின்போது தாக்குதலாக்கப்பட்டவா்களது அரசியல்வாதிகளின் வீடுகள் சொத்துக்களுக்கு வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சா் பிரசன்ன ரணதுங்க அவா்களினால் நஸ்டஈடு வழங்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகைக்கு எதிராகவே சிவில் அமைப்புக்கள் இவ் அடிப்படை உரிமை மீரல் வழக்கு தாக்குதல் செய்தப்பட்டுள்ளது. இதன் பின்னா் 2 கிழமையின் இவ் வழக்கினை உச்சரீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கும் சிவில் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிவில் அமைப்புக்கிளின் பிரநிதி ஹில்மி அஹமட் தெரிவித்தாா்.

கடந்த காலங்களில் அளுத்கம, ஜின்தோட்ட, அம்பாறை , திகனை மினுவான்கொடை போன்ற வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சொத்துக்கள் உயிர்களுக்கு இதுவரையிலான எவ்வித நஸ்ட ஈட்டையோ புனா் நிர்மாணங்களோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசினால் வழங்கப்படவில்லை.

இதனை விடுத்து அரசியல் வாதிகளின் சொத்துக்களுக்கு தற்போதைய வீடமைப்பு அமைச்சா் எடுத்த நடவடிக்கை எதிராகவே இவ் வழக்கு தாக்கல் செய்யப்ட உள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி சிராஸ் நுார்தீன் தெரிவித்தாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *