இளம் வயதில் 10 ஆயிரம் ஓட்டங்கள் சாதனைப் படைத்த ஜோ ரூட்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த இளம் வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்கள் எடுத்தார். அவர் சரியாக 100 ஓட்டங்களை எட்டியபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 10,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.

இதன்மூலம் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும், உலகளவில் 14வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

மேலும், இளம் வயதில் (31) டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற அலஸ்டையர் குக்கின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

ஜோ ரூட் 118 டெஸ்ட் போட்டிகளில் 10,015 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 26 சதங்கள், 53 அரைசதங்கள் அடங்கும்.   

டெஸ்டில் இளம் வயதில் 10 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்:

ஜோ ரூட் (31)
அலஸ்டையர் குக் (31)
சச்சின் டெண்டுல்கர் (31)
ஜாக்யூஸ் கல்லீல் (33)
ரிக்கி பாண்டிங் (33)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *