ரஷ்யாவிலிருந்து வெளியேற முடியாமல் திணறும் Google!

Google நிறுவனம் ரஷ்யாவிலிருந்து அதன் சேவைகளை வெளியேற்றச் சிரமப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gmail, Google Maps, Youtube போன்ற சேவைகளை வழங்கும் Google தொடர்ந்து ரஷ்யாவில் செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே, மற்ற பெரிய நிறுவனங்களான Facebook, Twitter ஆகியவை அவற்றின் சமூக ஊடகத் தளங்களை அந்நாட்டிலிருந்து அகற்றியுள்ளன.

Googleஇன் ரஷ்ய வங்கிக்கணக்கு பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, நிறுவனத்தால் தொடர்ந்து ரஷ்யாவில் செயல்படக் கடினமாக இருந்ததாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

எப்படியிருப்பினும், ரஷ்யர்கள் Googleஇன் சேவைகளை நம்பியுள்ளனர் என்று குறிப்பிட்ட Google தொடர்ந்து அதன் சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது.

தேடல்தளம், காணொளித் தளம், மின்னஞ்சல் தளம், வரைபடத் தளம், செயலிகளுக்கான தளம் போன்ற Google சேவைகளை ரஷ்யப் பயனீட்டாளர்கள் நாடலாம்.

இதற்கிடையே Google, அதன் தளத்தில் ரஷ்ய நிறுவனங்களின் விளம்பரங்களைத் தடை செய்துள்ளது.

அத்துடன், ரஷ்ய-உக்ரேனியப் போரைப் பற்றிய தவறான தகவல்களை அகற்றும் செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *