திருமணத்திற்கு முன் மணமகனுக்கு 10 கட்டளைகளை விதித்த மணப்பெண்!

திருமண விழாவில் மணமகளக்கு மணமகள் 10 கட்டளைகள் விதித்து வைக்கப்பட்ட பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ்.

இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த அனுசியா என்ற பெண்ணுக்கும் பெரியோர்களால் கலந்து பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்றது.

இதற்காக மணமகனின் நண்பர்கள் மணமக்களை வாழ்த்தி நிறைய பேனர்களை அப்பகுதியில் அமைத்திருந்தனர்.

அவற்றில் மணமகளின் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அந்த பேனரில் தனது வருங்கால கணவருக்கு மணமகள் 10 கட்டளைகள் அடங்கிய வாசகங்கள் இருந்தது.

அவைகள் பின்வருமாறு.

1. என்னை தவிர வேறெந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க கூடாது.

2. மற்றவரின் மனைவியை பார்க்கவோ, பார்த்து சிரிக்கவோ கூடாது.

3. இரவு 8.30 மணிக்கே சமையலறை பூட்டப்படும். அதற்கு முன்னதாக சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.

4. படுக்கையறை கதவு இரவு 9.30 மணிக்கு பூட்டப்படும்.

5. குளிக்க செல்லும் போது டவல், சோப்பு ஆகியவற்றை நீங்களே எடுத்து கொள்ள வேண்டும்.

6. ஓட்டலில் சாப்பிடக் கூடாது. பழைய சாதமானாலும் வீட்டில் தான் சாப்பிட வேண்டும்.

7. குடிக்க அனுமதி இல்லை. அப்படி குடித்து விட்டு வீட்டிற்குள் அனுமதி இல்லை. தெருவில் தான் தூங்க வேண்டும்.

8. இரவு 6.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை நான் மெகா சீரியல் பார்த்து கொண்டிருப்பேன். அந்த நேரம் என்னை தொந்தரவு செய்யக் கூடாது. அந்த நேரம் பச்ச தண்ணி கூட கிடையாது.

9. தூங்கும் போது குறட்டை விடக்கூடாது.

10. மாமியாரின் செயல்பாடுகளுக்கு அவ்வப்போது தக்க பதிலடி கொடுக்கப்படும்.

இவ்வாறு 10 கட்டளைகள் மணமகனுக்கு மணமகள் இடுவதாக அந்த பேனரில் அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *