அனைத்து வகையான எரிபொருளும் ரூ.400-500 வரை அதிகரிக்கலாம்!

அபேசிங்கஎதிர்காலத்தில் அனைத்து வகையான எரிபொருட்களும் ரூபா 400-500 வரை அதிகரிக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்னும் ஒரு மாதத்திற்கு எரிபொருள் இருப்பு இருக்கும் அதேவேளை அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

டொலர் மதிப்பு ரூ.400-ஐ தாண்டும், ஒரு கிலோ பருப்பு ரூ.700-800-க்கும், ஒரு இறாத்தல் பாண் ரூ.200-250-க்கும் விற்பனைச் செய்யப்படும் என்றும், குடிமக்கள் மூன்று வேளை உணவு சாப்பிட முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தோல்வியடைந்த அரசாங்கமும் தலைவரும் இருப்பதாகவும், இவ்வாறான சூழ்நிலையில் சர்வதேச நிறுவனங்கள் இலங்கைக்கு நிதியளிப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒருமித்த அரசாங்கம் தேவை என்றும், அத்தகைய அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க முடியும்.

எவ்வாறாயினும், சில இலக்குகளை அடைய ஏனைய கட்சிகளின் ஆதரவு தேவை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த செயல்முறைக்கு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை தேவைப்படும், பின்னர் தேர்தலை நடத்த முடியும்.

குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் வரை எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

மூன்று மில்லியன் எரிவாயு பற்றாக்குறையாக இருப்பதாகவும், பற்றாக்குறையை ஈடுசெய்ய நாளாந்த இறக்குமதி நாட்டிற்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

2,800MT எரிவாயு மூலம் 250,000-280,000 12.5kg எரிவாயு சிலிண்டர்களை உற்பத்தி செய்ய முடியும், அதே நேரத்தில் 100,000 சிலிண்டர்கள் மாத்திரமே நாளாந்த சந்தைக்கு வெளியிடப்பட்டன.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் ஏப்ரல் 12ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை மூடப்பட்ட நிலையில், 1.4 எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய குறைந்தபட்சம் 30,000MT எரிவாயு இலங்கையில் இறக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *