மக்களை அடக்க மாந்தீரிக தண்ணீரை தயாரித்து கொடுத்த ஞானக்கா!

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தின் பலனாக ராஜபக்ச தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து குருநாகல்லில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் வீடு முழுமையாக எரிந்து நாசமானது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதேபோல் இலங்கை  முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் வீட்டிற்கும் தீவைக்கப்பட்டது.

ஒட்டுமொத்த இலங்கையும் கலவரக் காடாக காட்சியளிக்கும் நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அமைதி காக்குமாறும், வன்முறைகளை கைவிடுமாறும் நேற்று இலங்கை ஜனாதிபதி கோட்டய ராஜபக்ச டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்றும், மஹிந்த ராஜபக்ச பாதுகாப்பாக இருப்பதாகவும் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

கோட்டய ராஜபக்சவுக்கு ஜோதிடத்தில் அதிகம் நம்பிக்கையுள்ளதாக கூறப்படும் நிலையில்  ஜோதிட முடிவுகளை வைத்தே அவர் அரசியல் முடிவுகளை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. ஞான அக்கா என்ற பெண்மணியே அவரின் ஆஸ்தான ஜோதிடர். இலங்கையில் மக்கள் மனநிலை ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக திரும்பிய ஆரம்பத்திலேயே ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான மக்களின் மன நிலையை தன்னால் மாற்றமுடியும் என தெரிவித்திருந்த ஞான அக்கா தன்னால் மந்திரிக்கப்பட்ட தண்ணீரை டன் கணக்கில் போராட்டக் களத்தில் இறங்கினார் என்றும், இந்த மாந்திரீக தண்ணீரை தயாரிக்க இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட அரிய வகை மலர் ஒன்று டன் கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மந்திரிக்கப்பட்ட அந்த தண்ணீர் பாட்டிகள் போராட்ட களத்தில் இறக்கப்பட்ட நிலையில், அதனை குடித்த பிறகே போரட்டம் தீவிரமடைந்து மஹிந்த ராஜபக்ச பதவி இராஜினாமா, வீடுகள் எரிப்பு என உக்கிரம் கண்டுள்ளது இலங்கை என்கிறார்கள். இலங்கை அனுராதபுரத்தில் உள்ள ஞான அக்காவின் ஆடம்பர ஹோட்டலையும் போராட்டக்காரர்கள் உடைத்ததோடு, ஞான அக்காவையும் தேடி வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *