அறையில் ஆணுறைகள் சித்ரா மரணத்தில் பரபரப்பு வாக்குமூலம்!

சித்ராவை ஹேம்நாத் கொலை செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளதாக அவரது நண்பர் ஒருவர் பேட்டியளித்துள்ளார்.

சூடு பிடிக்குமா வழக்கு

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் உள்ள அவரது கணவர் ஹேம்நாத் மாபியா கும்பல் எனக்கூறி 7 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் இடம்பெற்றுள்ள ஒருவர் ஹேம்நாத் மற்றும் சித்ரா குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹோட்டல்களில் ரூம்

ஹேம்நாத்தை 10 வருடங்களாக எனக்கு தெரியும். ஆற்காடு வீராசாமியின் பேரன் என்று பொய் சொல்லித்தான் ஹேம்நாத் எனக்கு அறிமுகமானார். அவருக்கென்று சொந்த தொழில் எதுவும் கிடையாது, வேலையும் இல்லை. ஆனால், பிரபலமாகி வரும் தொகுப்பாளினிகளை காதல் வலையில் வீழ்த்தி நட்சத்திர ஹோட்டல்களில் ரூம் போட்டு திட்டத்தை கட்சிதமாக முடிப்பார். மேலும், தொகுப்பாளினிகள் சம்பாதிக்கும் பணத்தை வாங்கி உல்லாசமாக இருப்பார். அத்துடன் கல்லூரிகளில் சீட் வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்து வந்த ஹேம்நாத் எனக்கு தெரிந்தவரிடம் இருந்தே 2.45 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளான். இதெல்லாம் எனக்கு தெரிந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் இருந்து விலக தொடங்கினேன்.

ரொம்ப நல்ல பெண்

இந்த சூழலில்தான் சித்ராவுடன் அவனுக்கு நிச்சயதார்த்தம் ஆன விஷயம் தெரிந்தது. விஜே சித்ராவை எனக்கு மீடியா வட்டாரம் மூலம் தெரியும். ரொம்ப நல்ல பெண். ஆனால், ஹேம்நாத்தை போல ஃப்ராடுவை ஏன் அவர் காதலித்தார் என்றுதான் தெரியவில்லை. சித்ரா இறந்து இரண்டு நாள் கழித்து அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து ஹேம்நாத்தின் பொருட்களை எடுத்து வருமாறு என்னிடம் ஹேம்நாத் கேட்டான். அதன்படி ஆட்களை வைத்து அந்த வீட்டுக்கு சென்றேன்…

டப்பா முழுக்க ஆணுறைகள்

வீட்டுக்குள் இருந்த ஃப்ரிட்ஜில் பீர் பாட்டிகள் இருந்தன… அறைக்குள் போதை மாத்திரைகள் மற்றும் ஒரு பெரியா டப்பா முழுக்க ஆணுறைகள் இருந்தன… அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்…. ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்த பிறகு என்னுடைய காரில்தான் அவனை காவல் நிலையம் அழைத்து செல்வேன்… அப்படி ஒருநாள் காருக்குள் இருந்து யாருக்கோ போன் போட்ட ஹேம்நாத், ” சார் என்னை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள், உங்களுக்கு என்ன வேணுமோ செய்கிறேன்” என்றான்…

பகீர் பேட்டி

”சித்ராவை இவன் கொலை செய்திருப்பான் என்ற சந்தேகமும் எனக்கு உள்ளது… இருப்பினும் பழகின பாவத்துக்காக அவனது பெற்றோர் முகத்துக்காக சில உதவிகளை செய்துள்ளேன்… ஆனால், இப்போது என் மீதே புகார் கொடுத்துவிட்டான்…. அவனுக்கு எந்த கொலை மிரட்டலும் இல்லை… அவனை பற்றி மீடியாக்களில் பேசி வந்த ரோகித் என்ற நண்பர் மீது லாரி ஏற்றிவிட்டான். இப்போது அந்த நண்பர் படுத்த படுக்கையாக இருக்கிறார்… ஹேம்நாத் ரொம்ப மோசமானவன்… சித்ரா வீணாக தனது வாழக்கையை நாசமாக்கிக்கொண்டார்” என ஹேம்நாத்தின் முன்னாள் நண்பர் இம்மான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *