இலங்கையில் எரிவாயும், எரிபொருளும் இல்லாமல் போகும் அபாயம் நிதி அமைச்சர் எச்சரிக்கை!

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான விசேட அறிவிப்பு ஒன்றை நிதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றில் வெளியிட்டார்.

இதன்போது அவர் தெரிவித்த முக்கியமான சில விடயங்கள்.

  • தற்போது எரிபொருள், எரிவாயு, மின்சாரம் என்பவற்றுக்குத் தட்டுப்பாடு உள்ளது.
  • இந்த நிலைமையைச் சரியாக முகாமை செய்யாவிட்டால், எரிபொருள், எரிவாயு மின்சாரம் என்பன முற்றாகக் கிடைக்காமல் போகலாம்.
  • கட்சி பேதம் இன்றி நாட்டின் நிலைமை மாற்றுவதற்கான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.
  • வரிக்குறைப்பை செய்து இந்த அரசாங்கம் வரலாற்றுத் தவறை செய்துவிட்டது.
  • அதிக வட்டிக்குக் கடன் பெறுகின்ற நிலைமை அதிகரித்துள்ளது.
  • அரசாங்கம் சம்பளத்துக்காக மட்டும் 845 பில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளது – இது வருமானத்தை விட அதிகம்.
  • 2019ல் 7 பில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டு ஒதுக்கம் தற்போது 50 மில்லியன் டொலரைவிட குறைவாகவே உள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்கூட்டியே சென்றிருக்க வேண்டும்.
  • நாணயப் பெறுமதி இறக்கத்தை படிப்படியாக மேற்கொண்டிருக்க வேண்டும்.
  • அனைத்து அரசாங்கங்களும் பெரிய கடன் வாங்கி சிறியளவு கடனை செலுத்தி இருக்கிறார்கள்.
  • கடந்த ஆண்டுகளில் 8 பில்லியன் கடன் செலுத்தப்பட்டுள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டுக்கு வர 6 மாதங்களாவது செல்லும்
  • அதற்கு முன்னர் அவசர உதவிகளைக் கோரி இருக்கிறோம் – இந்தியா உதவி செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *