40 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தி வீர மரணமடைந்த உக்ரைனிய விமானி!

தனி ஆளாக 40 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டு உக்ரைன் போர் விமானவீரர் ஒருவர் வீர மரணத்தை தழுவி இருக்கிறார்.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இரண்டு மாதங்களையும் தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்திருக்கும் நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே, உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்யாவால் இன்றளவும் கைப்பற்ற முடியவில்லை. இதனிடையே, போர் தொடங்கிய நாள் முதலாகவே உக்ரைன் போர் விமானி ஒருவர் ரஷ்ய விமானப் படையை திணறடித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. போரின் முதல் நாளிலேயே 6 ரஷ்ய போர் விமானங்களை அவர் சுட்டு வீழ்த்தினார்.

உக்ரைன் விமானப் படை வீரர்களிலேயே மிகவும் தீரமாகவும், திறமையாக செயல்படும் நபராக அறியப்பட்ட அந்த வீரரின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை உக்ரைன் அரசு ரகசியமாக வைத்திருந்தது. ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ (கீவ் நகரின் பேய்) என்ற புனைப்பெயரின் மூலமாகவே அவர் அடையாளப்படுத்தப்பட்டு வந்தார். ரஷ்ய விமானப் படைக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக அவர் விளங்கி வந்தார்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதியன்று கீவ் நகரை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் ஒரே நேரத்தில் படையெடுத்து வந்தன.

பொதுவாக, இதுபோன்ற சமயத்தில் எந்த நாடாக இருந்தாலும் எதிரி நாட்டை விட அதிக எண்ணிக்கையில் போர் விமானங்கள் இருந்தால் மட்டுமே நேரடி யுத்தத்துக்கு தயாராகும். உக்ரைனிடமோ உடனடியாக அவ்வளவு எண்ணிக்கையில் போர் விமானங்கள் இல்லை. இதனால் கிட்டத்தட்ட சரணடைந்து விடலாம் என்ற மனநிலைக்கே உக்ரைன் ராணுவம் வந்துவிட்டது.

ஆனால், சற்றும் பயப்படாத ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ , தனி ஒருவனாக ரஷ்ய போர் விமானங்களை தான் எதிர்க்க போவதாக தெரிவித்தார். இதற்கு முதலில் உக்ரைன் ராணுவம் சம்மதிக்கில்லை. அசாத்தியமான வீரர் ஒருவரை தாங்கள் இழக்க முடியாது என ராணுவம் கூறியது. எனினும், ராணுவத்தை ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ சம்மதிக்க வைத்தார். இந்த சூழலில் உக்ரைன் போர் விமானங்கள் ஒன்றாக செல்வது பெரும் சேதத்தை ஏற்படுத்தும் எனக் கூறிய அவர், தனியாக செல்வதுதான் இந்த தருணத்தில் நல்லது எனக் கூறினார். இறுதியாக அதற்கு உக்ரைன் ராணுவமும் சம்மதித்து. உண்மையில், ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ இனி திரும்பப் போவதில்லை என உக்ரைன் ராணுவத்துக்கு தெரியும். அவர்களை விட கோஸ்ட் ஆஃப் கீவ்வுக்கு அது நன்றாகவே தெரியும்

இதையடுத்து, தனது ‘மிக் – 29’ போர் விமானத்தில் புறப்பட்ட ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’, ரஷ்ய போர் விமானக் கூட்டத்துக்கு இடையே புகுந்து சென்று அதிரடி தாக்குதலை நடத்தினார்.

பெரும் படையை எதிர்பார்த்து காத்திருந்த ரஷ்யப் படையினர், தனியாக ஒரே ஒரு போர் விமானம் வரும் என எதிர்பார்க்கவில்லை. மேலும், தனி போர் விமானம் என்பதால் அந்தக் கூட்டத்தில் அதனை மட்டும் துல்லியமாக குறிவைத்து தாக்குவதும் ரஷ்ய விமானிகளுக்கு பெரும் சவாலாக இருந்தது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ , சுழன்று சுழன்று பறந்து ரஷ்ய போர் விமானங்களை ஒன்றன் பின் ஒன்றாக சுட்டு வீழ்த்தினார். இந்த அதிரடி தாக்குதலால் நிலைக்குலைந்த ரஷ்ய விமானப் படை, உடனடியாக பின்வாங்க தொடங்கியது. இவ்வாறு 40 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய பின்னர், ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ வீரரின் விமானத்தை ரஷ்ய விமானப் படைகள் சுற்றிவளைத்து தாக்கியது. இதில், அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ வீர மரணமடைந்தார்.

இதையடுத்து, ‘கோஸ்ட் ஆஃப் கீவ்’ வீரரின் பெயரை உக்ரைன் ராணுவம் அண்மையில் வெளியிட்டது. இதில் அவரது பெயர் ஸ்டெபான் டரபால்கா என்பது தெரியவந்தது. கீவ் நகரின் பக்கத்தில் உள்ள சிறிய கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் ஸ்டெபான் பிறந்திருக்கிறார். கீவ் ராணுவத் தளத்தில் இருந்து அடிக்கடி அவரது கிராமத்துக்கு மேலே போர் விமானங்கள் பறப்பதால் அவற்றின் மீது ஸ்டெபானுக்கு தனி ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் சிறு வயதிலேயே போர் விமானியாக வர வேண்டும் என ஸ்டெபான் முடிவு செய்துவிட்டார். அதன்படியே, உக்ரைன் விமானப் படையில் போர் விமானியாக 20 வயதில் இணைந்த அவர், சுமார் 18 ஆண்டுகள் அங்கு பணியாற்றி இருக்கிறார். தனது பணிக்காலத்தில் ஏராளமான வீர சாகசங்களை ஸ்டெபான் செய்துள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. அவரது தீரச் செயலை பாராட்டி உக்ரைன் ராணுவத்தின் உயரிய விருது அவருக்கு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *