பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு ஏற்பட்டுள்ள சோகம்!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கும் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்ஸிற்கும் பிறக்க இருந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று இறந்துவிட்டதாக தெரிவித்ததுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் இரட்டை குழந்தையை எதிர்பார்ப்பதாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில், ரொனால்டோவிற்கும் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்ஸிற்கும் பிறக்க இருந்த இரட்டை குழந்தைகளில் ஒன்றான ஆண்குழந்தை இறந்துவிட்டதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா இருவரும் இணைந்து வெளியிட்ட இணையதள பதிவில், “மிகவும் ஆழ்ந்த சோகத்தில் எங்களின் இரட்டை குழந்தைகளில் ஒன்றான ஆண் குழந்தை இறந்துவிட்டதை தெரிவிக்கிறோம், இந்த வலியை எந்தவொரு பெற்றோரும் உணருவார்கள் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் பிறந்துள்ள எங்களின் பெண்குழந்தை தான் சிறிது நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்து, தற்போது உயிர்வாழ்வதற்கான சக்தியை தந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த துயரமான தருணத்தில் தனிமையை விரும்புவதாகவும், சிறப்பான கவனிப்பு மற்றும் ஆதரவு வழங்கிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் எங்களது நன்றி என தெரிவித்துள்ளனர்.

5 முறை சிறந்த கால்பந்து வீரர் பட்டம் பெற்றுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஏற்கனவே 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என 4 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *