ரஷ்ய நாட்டின் உலகின் மிகப்பெரிய ஆடம்பரப் படகை சிறைப்பிடித்த‌ ஜேர்மனி!

உலகின் மிகப்பெரிய ஆடம்பரப் படகை ஜேர்மன் அதிகாரிகள் சிறைப்பிடித்துள்ளார்கள். அந்த படகு, ரஷ்யாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான Alisher Usmanov என்பவருடன் தொடர்புடையது.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளால் தடைகள் விதிக்கப்பட்ட ரஷ்ய செல்வந்தர்களில் Usmanovம் ஒருவர் ஆவார். இந்த சிறைப்பிடித்தலில் என்ன சிறப்பு? இந்த ஆடம்பரப்படகுதான் உலகிலேயே மிகப்பெரிய ஆடம்பரப் படகாகும்.

ரஷ்ய ஜனாதிபதியான புடினுக்கு நெருக்கமான மிகப்பெரிய செல்வந்தர்கள் மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடையின் பெருமளவிலான தாக்கத்தை பிரதிபலிப்பதாக இந்த சிறைப்பிடித்தல் உள்ளது.

இதுவரை 2.5 பில்லியன் டொலர்களுக்கும் அதிக மதிப்புடைய ஆடம்பரப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், புடினுக்கு நெருக்கமானவர்கள் அனுபவிக்கும் ஆடம்பர வாழ்வுக்கு அடையாளமாக அந்தப் படகுகள் காணப்படுகின்றன. தடை விதிக்கப்படுவதற்கு சற்று முன்பு, Usmanov தனது சொத்துக்களை தன் சகோதரியான Gulbakhor Ismailova என்பவர் பெயருக்கு மாற்றியுள்ளார்.

ஆக, 512 அடி நீளம் கொண்ட அந்த ஆடம்பரப் படகின் தற்போதைய சட்டப்பூர்வ உரிமையாளர் Ismailovaதான். ஆனால், அவர் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. Dilbar என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆடம்பரப்படகில் இரண்டு ஹெலிகொப்டர்கள் இறங்கும் தளமும், 82 அடி நீள நீச்சல் குளம் ஒன்றும் உள்ளன. படகு ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நீச்சல் குளம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடம்பரப் படகின் மதிப்பு, 600 முதல் 735 மில்லியன் டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *