ஜே.ஆர் முதல் கோத்தபாய வரை சிறுபான்மையினரை நசுக்கிதே இன்றைய நெருக்கடிக்கு காரணம்!

ஜெ ஆர் ஜெயவர்தன முதல் கோத்தபாய ராஜபக்ச வரை இலங்கை திருநாட்டை  கட்டியெழுப்புவதில் முக்கியத்துவம் கொடுக்காமல் சிறுபான்மை இனத்தை
அளிப்பதிலும் அடக்கி ஆள்வதிலும் அதி முக்கிய கவனம் செலுத்தினார்கள்

1-உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவில்லை
2- சர்வதேச தரத்திலான கல்வித்தரத்தை மேம்படுத்த வில்லை
3- இலங்கைவாழ் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை கொடுக்கவில்லை
4- நாட்டைக் கட்டியெழுப்ப தேவையான சிறந்த பொறியலாளர்களை உருவாக்கவில்லை
5- மீன்பிடி துறையை அதிநவீன படுத்தப்படவில்லை
6- சிறந்த சுற்றுலா மையங்களை உருவாக்க வில்லை
7- வெளிநாட்டில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யும் அளவுக்கு உள்நாட்டு பொருள் ஏற்றுமதியை அதிகரிக்க வில்லை

8- தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவில்லை
9- சட்டம் ஒழுங்கு நீதித்துறை அனைத்து இன மக்களுக்கும் சமமாக இல்லை
10- மிக மோசமான நீதித்துறையும்
மிகமோசமான ஊழலும் இவைகளை எந்த ஒரு அரசாங்கமும் தீர்த்து வைத்ததும் இல்லை அல்லது  தண்டனை கொடுத்ததும் இல்லை ….!!!
11- அரசியல்வாதிகள்  வரவுக்கு அதிகமான செலவும் வீண் விரயமும்  செய்தல்

12 – தன் நாட்டின் வளங்களை பயன்படுத்தி
நாட்டைக் கட்டியெழுப்பால் அனைத்தையும் வெளிநாட்டு கடன் மூலமாக செய்யும் தவறான பொருளாதாரக் கொள்கை
     
பொருளாதார அறிவு இல்லாத ஆட்சியாளர்களினால்  தற்போது இலங்கை நாடு  மீளமுடியாத பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளது

(இதுபோன்று ஏராளமான குறைகள் ஆட்சியாளர்கள் கடந்த 74 வருடமாக செய்துள்ளார்கள் எனவே தற்போது நாடு பிச்சை எடுத்தும் வாழ முடியாத கட்டத்தில் உள்ளது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *