அவமானப்படுத்திய ஆசிரியையை 30 ஆண்டுகளுக்குப் பிறகு கொலை செய்த மாணவன்!

பெல்ஜியம் நாட்டில் 30 ஆண்டுகள் கழித்து தனது பள்ளி ஆசிரியரை, 101 முறை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் சொன்ன காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2020 நவம்பர் 20-ஆம் திகதி, பெல்ஜியம் Antwerp நகரத்தில் 59 வயதான Maria Verlinden எனும் முன்னாள் பள்ளி ஆசிரியை 101 முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அவரது கொலை வழக்கில் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிரமாக முயற்சி செய்தனர். பல டிஎன்ஏ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்தபிறகும் கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர் கொலை செய்யப்பட இடத்தில் அவரது பணப்பை அப்படியே இருப்பதாகவும், டைனிங் டேபிளிளும் எந்த பொருளும் சேதமாகவில்லை என்பதால் அவர் கொள்ளை முயற்சிகளில் கொலை செய்யப்படவில்லை என்பது உறுதியானது.

16 மாதங்கள் கடந்த நிலையில், அவரை கொன்றது நான் தான் என Gunter Uwents எனும் நபர் தனது நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார். அவரது நண்பர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்க Gunter கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், 1990-களில் தனது 7 வயதில் Antwerp-ல் உள்ள ஆரம்ப பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது தனக்கு ஆசிரியராக இருந்த Maria Verlinden, வகுப்பில் தன்னை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியதாக கூறினார். தனது கருத்துகளை Maria ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் அவர் துன்புறுத்தப்பட்டதாக மனதளவில் பாதிக்கப்பட்டதாக கூறினார்.

30 ஆண்டுகள் கழித்து, நவம்பர் 2020-ல் ஆண்ட்வெர்ப்பிற்கு அருகிலுள்ள நூர்டர்விஜ்க் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறினார். இது ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக இருந்தது.

விசாரணையில் அவர் கூறியது உறுதி செய்யப்படுகிறதா என்று பார்ப்போம் என்று வழக்கறிஞர் கூறினார். உவென்ட்ஸ் செவ்வாய்க்கிழமை நீதிபதி முன் ஆஜராகி, கொலைக் குற்றச்சாட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள உவென்ட்ஸ் ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவர் என்று பெல்ஜிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன, அவர் வீடற்றவர்களுக்கு உதவுவதில் பெயர் பெற்றவர் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *