ரத்தம் குடித்து தொப்பையை வளர்க்கும் திருமணமாகாத ஆண்கள்!

எத்தியோப்பியாவின் ஓமோ பள்ளத்தாக்கில் உள்ள காடுகளில் வாழும் மக்கள் ரத்தம் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றார்களாம்.

ஏன் இந்த வினோத பழக்கம் கடைப்பிடிக்கப்படுகின்றது என்பது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

போடி பழங்குடிகள்
ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த ஒருவகை பழங்குடியினர்களின் பெயர் போடி.

அவர்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி தொப்பை வளர்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

தொப்பை வளர்த்து கொழுத்த ஆண்களாக இருப்பவர்களுக்கு அந்த பழங்குடியினர்களுக்கு இடையே ஸ்டார் அந்தஸ்து கிடைக்கும்.

அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் கிடைக்கும் என்பதால், பசுவின் ரத்தம் குடித்து தொப்பையை வளர்க்கின்றனர்.

எத்தியோப்பியாவின் ஓமோ பள்ளத்தாக்கில் உள்ள காடுகளில் அவர்கள் பெரும்பாலும் வசிக்கின்றனர். சிலர் பாலுடன் ரத்தத்தைக் கலந்து குடிப்பார்கள்.

பசுவின் ரத்தம் வேண்டும் என்பதற்காக பசுவை போடி பழங்குடியினர்கள் கொல்லமாட்டர்கள். மாறாக, உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் காயத்தை ஏற்படுத்தி, அதில் இருந்து ரத்தத்தைப் பெற்று குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதற்காக போட்டியும் நடத்தப்படுகிறது. கயல் எனப்படும் பழங்குடியின மக்களின் புத்தாண்டில் திருமணமாகாத ஆண்கள் பசும்பால் மற்றும் ரத்தத்தைக் குடிக்க வேண்டும்.

இந்தப் போட்டிக்காக அவர்கள் 6 மாதங்களுக்கு முன்பே தயாரிப்புகளைத் தொடங்கிவிடுவார்கள். போட்டிக்கு தயாராகும் ஆண்கள், எந்தபெண்ணுடனும் உறவு கொள்ளக் கூடாது. குடிசையைவிட்டு வெளியே வரக்கூடாது.

அவர்களுக்கு உணவாக பசும்பாலும் ரத்தமும் கொடுக்கப்படும். சூரிய உதயமாகும்போது 2 லிட்டர் அளவில் கொடுக்கப்படும்.

மீதமுள்ள கோப்பை ரத்தம் மற்றும் பாலை நாள் முழுவதும் குடிக்கவேண்டும். போட்டி நாளில் அவர் தன் உடம்பை எப்படி வளர்த்துள்ளார் என்பதை வெளியுலகுக்கு காட்ட வேண்டும்.

இது மிகவும் சுவாரஷ்யமான போட்டியாக உள்ளது அல்லவா? இப்படியும் உலகில் பல வினோத பழக்கங்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் கடைப்பிடித்து தான் வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *