தனுஷ் படங்களிலிருந்து அடுத்து அடுத்து விலகும் முக்கிய பிரபலங்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் ”மாறன்”. விரைவில் இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளது.

ஏற்கனவே படத்திலன் டிரைலர் வெளியான நிலையில், படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கும் தனுஷின் டயலாக்குகள் மிக அழுத்தமாக இருந்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

எனவே, டிரைலரில் இடம் பெற்றிருந்த வசனங்கள் சூப்பராக இருந்ததாகவும் வசனகர்த்தாவான விவேக் அவர்களுக்கு நன்றி என்றும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் பாடலாசிரியர் விவேக், தற்போது படத்திலிருந்து  விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், ‘மாறன்’ திரைப்படத்தில் திரைக்கதை வசனம் எழுத தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன். ஆனால் தற்போது கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாக அந்த படத்தில் இருந்து தான் விலகி விட்டதாகவும் எனவே இந்த படத்தில் உண்மையாக வசனம் எழுதியவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இன்று நான் இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி வந்தாலும் ‘மாறன்’ தான் ஒரு தொடக்கப்புள்ளி என்பதை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரட்டை மொழிகளில் உருவாகிவரும் ”வாத்தி” படத்திலிருந்து சமீபத்தில் ஒளிப்பதிவளர் தினேஷ் கிருஷ்ணன் விலகிய நிலையில், தற்போது மாறன் படத்திலிருந்து விவேக் விலகியுள்ளது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தனுஷ் படத்திலிருந்து விலக இவர்கள் காரணங்களை கூறினாலும் என்னதான் நடக்கிறது என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *