14 மாதங்கள் தனிமை 78 முறை பரிசோதனை கொரோனாவுடன் வாழும் அதிசய மனிதர்!

துருக்கியை சேர்ந்த முசாபர் காய்சான்(56) என்ற நபர் சுமார் 14 மாதங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலகிலேயே அதிக நாள்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்ற யாரும் விரும்பத்தகாத சாதனையை படைத்துள்ளார்.

முசாபர் காய்சான்(56) தனது Leukemia நோயால் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் பொது முதல் முறையாக 2020ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முசாபர் காய்சான்(56) முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அவர் உயிர் பிழைக்க மாட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்னர்.

ஆனால் முசாபர் காய்சான்(56) அனைவரையும் வியக்கும் வண்ணம் அதிலிருந்து மீண்டாலும் அடுத்தடுத்து மீண்டும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்.

அவருக்கு மொத்தம் 78 முறை அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இதுவரை 09 மாதங்கள் மருத்துவமனை என்றும், 05 மாதங்கள் தனது இஸ்தான்புல் வீட்டிலும் என 14 மாதங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டுள்ளார்.

மேலும் கொரோன பாதிப்பு அவரை விட்டு நீங்காததால் அவரால் கொரோனா தடுப்பூசியும் எடுத்துக்கொள்ள முடியாமல் தவித்துக்கொண்டு வருகிறார்.

இதற்கு முசாபர் காய்சானின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகக்குறைவாக இருப்பதும், அவர் லூக்கிமியா நோய்யால் பாதிக்கப்பட்டு இருப்பதுவுமே காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் மூலம் முசாபர் காய்சான்(56) உலகிலேயே அதிக நாள்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்ற யாரும் விரும்பத்தகாத சாதனையை படைத்துள்ளார்.

இதுகுறித்து முசாபர் காய்சான்(56)(56) பேசுகையியல் நான் நன்றாக இருக்கிறேன் என்றாலும் எனது உடலில் உள்ள கொரோனா எச்சங்கள் என்னை விட்டு விலகுவதாக தெரியவில்லை.

என்ன செய்வது ஒரு பூனை என்னுடைய சன்னலில் கடந்தும் சென்றால் கூட கொரோனா என்னை தோற்றி விடுகிறது. இதற்காக நான் என்றும் வருத்தப்படவில்லை ஆனால் எனது குழந்தைகள், மனைவி என எனது காதல் உறவுகளை இந்த தனிமைப்படுத்திக கொள்ளுதலால் தொடமுடியாது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

சாபர் காய்சான்(56) இறுதியாக கடந்தவாரம் மேற்கொண்ட சோதனையில் கொரோனவால் மீண்டும் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *