மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் கோடிக்கணக்கான சொத்து யாருக்கு?

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கவரின் 370 கோடி ரூபாய் சொத்துக்கள் யார் என்ற கேள்வியும், இதற்கான பதிலாக சில தகவல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இசை உலகையே தனது குரலால் மயங்கச் செய்த லதா மங்கேஷ்கரின் செல்வத்தையும், அவர் சேர்த்து வைத்த சொத்துகளுக்கும் யாருக்குக் செல்லப் போகிறது என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகின்றது.

இந்தியாவின் இசை மகளாக வலம்வந்த லதா மங்கேஷ்கர், 1942ல் தனது 13வது வயதில் இசை உலகில் கால் பதித்தார். 25 ரூபாய் ஊதியத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பின்பு ஒரு பாடலுக்கு 40 லட்சம் ரூபாய் வரை வாங்கும் பிரபல பாடகியாக உயர்ந்தார்.

இசைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இவரின் சொத்து மதிப்பு சுமார் 370 கோடி ஆகும். மும்பையின் ஆடம்பரமான பகுதியில் பெடர் சாலையில் கட்டப்பட்ட ‘பிரபுகுஞ்ச் பவன்’என்ற பங்களாவில் வசித்து வந்த இவரின் வீடு பல கோடி மதிப்புடையதாம்.

அழகான புடவைகள் மற்றும் நகைகள் அணிவதில் விருப்பம் கொண்ட இவருக்கு கார்கள் மீதும் பிரியம் அதிகமாம். இதனால் இவர் பல விலையுயர்ந்த கார்களையும் சொத்தாக வைத்துள்ளார்.

குடும்பத்தில் மூத்தவரான லதா மங்கேஷ்கருக்கு, ஆஷா போஸ்லே, மீனா கட்கர், உஷா மங்ஷே்கர் என்ற மூன்று தங்கைகளும், ஹிருதயநாத் மங்கேஷ்கர் என்ற தம்பியும் உள்ளனர்.

ர். இவர்கள் நான்கு பேரும் தற்போது வசதியாக இருந்து வருகின்றனர். இவர்களில் சகோதரருக்கு சொத்து செல்லும் என்றும் லதா அவருடைய தந்தையார் பெயரில் அறக்கட்டளை ஒன்றினை உருவாக்கி அந்த பெயரில் தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல இசைக்கலைஞர் தீனநாத் மங்கேஷ்கரின் மகனும், இந்திய இசை மேதைகளான லதா மங்கேஷ்கர் , ஆஷா போஸ்லே ஆகியோரின் இளைய சகோதரர் ஆவார். இவரும் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *