28 வயதில் 8 கணவர்களை ஏமாற்றி வந்த பெண் சிக்கியது எப்படி?

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஊர்மிளா அஹிர்வார் என்ற பெண் 8 திருமணம் செய்துள்ளார். இவருக்கு  வயது 28 தான் ஆகிறது. வசதியான ஆண்களை மட்டும் குறிவைத்து அவர்களை மயக்கி, திருமணம் செய்து கொள்வார். பின்னர், சமயம்பார்த்து அவர்களிடம் இருந்து பணம், நகைகளை திருட்டு எஸ்கேப் ஆகிவிடுவதே இவரது தொழில்..

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், கோட்டா, மத்திய பிரதேசத்தின் தாமோ, சாகர் போன்ற பகுதியில் உள்ள பணக்கார இளைஞர்களை வளைத்து போட்டு ஏமாற்றி உள்ளார். நகை, பணம் திருடுபோன பிறகு பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இப்படி ஊர்மிளா மீது ஏகப்பட்ட புகார்கள் பதிவாகின. இதைத்தொடர்ந்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த விசாரணைகள் நடக்கும் பொது ஊர்மிளாவுக்கு 7 திருமணம் ஆகியிருந்தது. 8 வது திருமணத்திற்கு சியோனி மாவட்டத்தை சேர்ந்த தஷ்ரத் படேல் என்ற இளைஞருக்கு வலைவீசிஉளார். அவரும் ஊர்மிளாவின் அழகில் மயங்கி 8 வது முறையாக வாக்கப்பட்டார். பின்னர், புது மனைவியை தனது சொந்த ஊருக்கு அழைத்து செல்ல வேண்டும் என விருப்பிய படேல், அதற்காக எல்லா நகைகளையும் மனைவிக்கு அணிவித்து காரில் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், ஏதோ ஒரு கிராமத்துக்கு போய் சிக்கிக்கொண்டால், ஊர்க்கு திரும்பமுடியாது என எண்ணிய ஊர்மிளா.. வேன்றுமென்றே சண்டை போட்டு காரை விட்டு இறங்கியதாக கூறப்படுகிறது. அதே இடத்தில், ஏற்கனவே ஒரு இளைஞர் பைக்கில் காத்திருந்தார். 8 வது கணவனிடம் இருந்து அபேஸ் போட்ட பணம், நகைகளுடன், அந்த இளைஞருடன் பைக்கில் தப்பித்துள்ளார்.

இதையெல்லாம் கண்டு அதிர்ந்து போன தஷ்ரத் படேல், உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். ஏற்கனவே ஊர்மிளாவை தேடிக்கொண்டிருந்த போலீசார் தகவல் அறிந்ததும் சமத்துவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்கள் இருவரையும் விரட்டி பிடித்தனர்.

பின்னர், விசாரணையில் தான் 8 கல்யாணம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் ஊர்மிளாவோடு இந்த திருமண மோசடியில் ஈடுபட்ட அர்ச்சனா ராஜ்புத், பாக்சந்த் கோரி, அமர் சிங் போன்றோரும் போலீசார் கைது செய்தனர். மேலும், 8 கணவன்களிடமிருந்து எவ்வளவு பணம், நகை கொள்ளையடுத்துள்ளார் எனபதையும், இதேபோல் வேறு எத்தனை பேர் ஏமாற்று போயிருக்கிறார்கள் என விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *