ஆண்கள் ஆட்டிறைச்சி சாப்பிடலாமா?

ஆட்டு மாமிசம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொருவிதமான பலனை தருவதாக உள்ளது.

எனவே அச்சமின்றி ஆட்டுக்கறியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

ஆண்கள் ஆட்டுக்கறி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் இது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சிலர் ஆட்டின் மூளையை தனியாக வறுத்து சாப்பிடுவார்கள். இதன் சுவையே அலாதியானது.
இது மனித மூளைக்கு அதிக சக்தியை கொடுக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.
புத்தி தெளிவடையும், நினைவாற்றல் அதிகரிக்கும்.

விந்தணு குறைபாடு உடைய ஆண்கள் இதை சாப்பிட தாது விருத்தி உண்டாகும்.

கப நோய் பாதிப்புள்ளவர்கள் ஆட்டின் மார்பு பகுதியில் உள்ள கறியை சாப்பிட்டலாம்.

நெஞ்சு எலும்பு கறியை சமைத்து உண்பதால் மார்புக்கு பலம் கிடைக்கும்.

மார்பு பகுதியில் உள்ள புண்கள் ஆறும். ஆட்டு இதயம் சாப்பிட்டால் நமது இதயத்திற்கு பலம் கிடைக்கும்.

மன ஆற்றல் பெருகும். ஆட்டின் நுரையீரல் சாப்பிட்டால் உடல் வெப்பம் தணியும், நுரையீரலுக்கு வலு கிடைக்கும்.

அதேபோல் ஆட்டின் கொழுப்பு இதயத்திற்கு நல்ல பலத்தை தரும்.

வயிற்றில் உள்ள எந்தவித புண்களையும் ஆற்றும் சக்தி இதற்கு உண்டு. கால், மூட்டு நோவு உள்ளவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து குடிக்கலாம். இதனால் கால்களுக்கு வலிவு கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *