இறைச்சி வாங்க கடைக்கு சென்ற பெயிண்டர் கோடீஸ்வரராக வீடு திரும்பினார்!

கேரளாவை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளிக்கு லொட்டரியில் ரூ 32 கோடி பரிசு விழுந்துள்ளது.

கேரளாவில் அரசு சார்பிலும் லொட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை ஒட்டி கேரள அரசு 32 கோடி ரூபாய் (இலங்கை மதிப்பில்) பரிசு தொகை கொண்ட பம்பர் லொட்டரி சீட்டு விற்பனையை தொடங்கியது.

இந்த கேரளா பம்பர் லொட்டரி டிக்கெட்டுகளை முடிவு திருவனந்தபுரத்தில் அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அந்த முடிவுகளின் அடிப்படையில் XG 218582 என்ற எண் வரிசை லொட்டரி சீட்டு முதல் பரிசை தட்டிச் சென்றதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி கேரள மாநிலம் கோட்டயம் அருகே வசிக்கும் பெயிண்ட் தொழில் செய்யும் சதானந்தன் என்பவர் இந்த லாட்டரி சீட்டை வாங்கியதன் மூலம் ஒரே நாள் இரவில் கோடீஸ்வரன் ஆகியுள்ளார்.

முதல் பரிசாக 32 கோடி அவருக்கு கிடைத்துள்ளது. அதாவது காலையில் இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்ற சதானந்தன் அப்போது லொட்டரி டிக்கெட் வாங்கினார், அடுத்த சில மணி நேரத்தில் மதியம் 12 மணியளவில் அவருக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளது.

50 ஆண்டுகளாக பெயிண்டராக உள்ள சதானந்தன் கூறுகையில், எனக்கு நிறைய கடன் உள்ளது, அதை இப்போது அடைப்பேன் மற்றும் தனது குழந்தைகளுக்காக அனைத்தையும் செய்ய விரும்புகிறேன் என கூறியுள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *