மூன்றாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட பலர் மருத்துவமனையில் அனுமதி!

சுவிட்சர்லாந்தில் மூன்றாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட பலர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே பூஸ்டர் எனப்படும் மூன்றாவது தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. முதலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அளிக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறையின் தரவுகளின் அடிப்படையில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மருத்துவமனையை நாடுவது பெருமளவு குறைந்துள்ளது என்றே சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் ஜனவரி 10ம் திகதி வெளியான தகவலில், மூன்றாவது டோஸ் போட்டுக்கொண்ட 451 பேர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையை நாடியுள்ளதாக பதிவாகியுள்ளது.

மட்டுமின்றி, இவர்களில் 11 பேர்கள் எவ்வித நோய் பாதிப்பும் முன்னர் இல்லாதவர்கள். இதில் 406 பேர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதுவரை 2.5 மில்லியன் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், 451 பேர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையை நாடியுள்ளது மிக குறைவான எண்ணிக்கை என்றே இது தொடர்பான நிபுணர்கள் கருத்தாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *