அமெரிக்கா வெளியிட்ட அரிய வகை நாணயம்!

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பினப் பெண் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல எழுத்தாளரும் பெண்ணிய ஆர்வலருமான மாயா ஏஞ்சலோ தனது சுயசரிதையால் பிரபலமானவர்.

அமெரிக்காவில் கணிசமான சர்ச்சையை ஏற்படுத்திய அந்தப் புத்தகத்தில், சிறு வயதில் தான் அனுபவித்த பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அதன் தாக்கம் குறித்து விரிவாக எழுதியிருந்தார்.

அவர் 2014 இல் தனது 86 வயதில் உயிரிழந்தார். இதற்கிடையில், மாயா ஏஞ்சலோவின் நினைவாக தற்போது கால் டொலர் மதிப்புள்ள நாணயங்கள் வெளியிடப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *