விண்வெளியில் உணவு விநியோகம் செய்து அசத்திய UBER EATS

விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ரெடிமேட் உணவுகளை UBER  நிறுவனம் விண்வெளிக்கு சென்று டெலிவரி செய்து அசத்தியுள்ளது.

வீடுகளுக்கு உணவு டெலிவரி வழங்கும் நிறுவனமான UBER EATS,  விண்வெளிக்கும் உணவு விநியோகம் செய்து வரலாறு படைத்துள்ளது. இதற்காக உலக பணக்காரர் ஆன ஜப்பானின் யுசாக்கூ உடன் UBER நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது.  

மேலும், விண்வெளிக்கு உணவு டெலிவரி செய்யும் முதல் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது தொடர்ப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) உணவு வழங்குவதைக் காட்டும் வீடியோவை UBER EATS நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. 

இம்மாதம் டிச. 8 ஆம் தேதி விண்வெளி வீரர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பேக் செய்யப்பட்ட உணவுகள் அடங்கிய கம்பெனி பேக்கேஜை எடுத்துக்கொண்டு மேசாவா விண்வெளிக்கு புறப்பட்டார். 

இதையடுத்து டிச.11 ஆம் தேதி மஜாவா சுமார் 9 மணிநேர ராக்கெட் பயணத்திற்குப் பிறகு ISS என்னும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தார். இந்த பயணத்துக்கு 66 பேர் கொண்ட குழுவினர் உதவி புரிந்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ ஒன்றை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் 

 அந்த பார்சலில் என்ன உணவு இருந்தது என்பதை கூறியுள்ளது. அதில், மிசோ, பீப் பவுல், மூங்கில் சிக்கன், பன்றி இறைச்சி ஆகியவை இருந்துள்ளன.

மேலும், “எங்கேயும், எப்போதும், என்ன உணவு வேண்டுமானாலும் டெலிவரி செய்வோம். இப்போது விண்வெளி உட்பட” என்ற வாக்கியங்களை பதிவிட்டுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை பூமியில் உள்ள மக்களுடன் கொண்டாட விரும்பிய UBER  ‘SPACEFOOD’  என்ற கூப்பன் கோட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *