திமிங்கிலத்தை தெய்வமாக வணங்கும் மக்கள்!

இந்தியாவில் திமிங்கல மீனை 300 ஆண்டுகளாக தெய்வமாக வணங்கி வழிபடும் நிகழ்வு ஆச்சரியத்தினை எற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் வல்சாத் தாலுகாவின் மகோட் டுங்ரி கிராமத்தில் தான் இந்த திமிங்கல மீன் கோவில் உள்ளது. இந்த கோவில் மத்ஸ்ய மாதாஜி கோவில் என்று அழைக்கப்படுவதுடன், இதில் தெய்வமாக திமிங்கல மீனை வழிபடுகின்றனர்.

சாஸ்திரங்களில் படி 33 கோடி தெய்வங்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில், ஒவ்வொரு இன மக்கள் இயற்கையின் ஒவ்வொரு வடிவத்தினை கடவுகளாக வணங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் திமிங்கல மீன்களை வழிபடும் கோவில் இருப்பது ஆச்சரித்தினை ஏற்படுத்தியுள்ளது. இக்கோவிலை கிராம மீனவர்கள் கட்டியுள்ளார்களாம்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு பிரபு தண்டேல் என்பவர் வாழ்ந்து வந்த நிலையில், அவர் இரவு தூங்கிக்கொண்டிருந்த போது, கனவு வந்துள்ளது.

அதில் கடற்கரைக்கு வரும் மிகப் பெரியதாக இருந்த ஒரு மிகப்பெரிய மீன் வந்ததுடன், தெய்வத்தின் வடிவத்தினை எடுத்து கரையை நோக்கி வந்ததும், இறப்பது போன்று தெரிந்துள்ளது.

இந்த ஆச்சரியமான கனவினை கிராம மக்களிடம் கூறிவிட்டு, கடற்கரைக்கு வந்த போது அங்கு கனவில் வந்தது போன்று உண்மையிலேயே இறந்து கிடந்துள்ளது.

இதைக் கண்ட மக்கள், திமிங்கலத்தை அம்மனின் அவதாரமாகக் கருதி, கடற்கரையில் பிரமாண்டமான மீன் தெய்வம் கோயிலைக் கட்ட முடிவெடுத்ததோடு, திமிங்கலத்தை கரைக்கு அருகிலேயே புதைக்க முடிவு செய்தனர்.

அதன்படி திமிங்கலத்தின் எழும்புகளை மட்டும் எடுத்துவிட்டு உடலை புதைத்துவிட்டதுடன், குறித்த எலும்பினை கோவிலில் வைத்துள்ளனர்.

ஆனால் இதனை சில கிராம மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கோவில் கட்டுவதற்கு எந்த உதவியும் செய்யாமல் இருந்துள்ளனர். இதனால் கிராமத்தில் நோய் பரவியதோடு, பின்பு மன்னிப்பு கேட்டு மனம் மாறியுள்ளனர். அதன் பின்பே நோய் குணமாகியுள்ளது.

இன்றும் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் முன், மீனவர்கள், மத்ஸ்ய மாதாஜி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டப்பிறகு தான் கடலுக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *