ஒரே பெண்ணுக்கு 3 முறை லொட்டரியில் அடித்த ஜாக்பாட் பரிசு!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மூன்று ஆண்டுகளில் மூன்று லொட்டரியில் பரிசு விழுந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் Maryland-ஐ சேர்ந்தவர் Kathleen Mille. 60 வயது மதிக்கத்தக்க இவர் வீட்டு வேலை செய்து வந்த நிலையில், தற்போது அதில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவர் வாங்கிய லொட்டரி டிக்கெட்( scratchcard jackpot lottery)-ல் இவருக்கு இந்த மாத துவக்கத்தில் 50,000 டொலர்(இலங்கை மதிப்பில் 1,01,39,115 கோடி ரூபாய்) பரிசாக விழுந்துள்ளது.

இவருக்கு இது போன்று லொட்டரியில் பரிசு விழுவது மூன்றாவது. கடந்த 2018-ஆம் ஆண்டு இதே போன்று scratchcard jackpot lottery-யில் 50,000 டொலரும், அதே போன்று இது முடிந்த இரண்டு மாதங்களுக்கு பின்பு அவர் லொட்டரியிலும் இதே பரிசு விழுந்துள்ளது.

இவர் இந்த மூன்று லொட்டரிகளையும் ஒரே கடையில் வாங்கியுள்ளார். இதை அறிந்த அவர் தன்னுடைய அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை.

உலகில் எத்தனையோ பேர் ஒவ்வொரு நாளும் வாங்கிக் கொண்டு, வெற்றி பெற மாட்டோமா என்று இருக்கும் போது, நான் மூன்றாவது முறையாக வென்றது ஆச்சரியமாக இருப்பது கூறியுள்ளார்.

இந்த வெற்றிக்கு பின் அவர் Maryland லொட்டரி தலைமையகத்திற்கு தன் நண்பர்களுடன் சென்ற போது, அங்கிருந்த அதிகாரி இவருக்கு பழக்கம் ஆகிவிட்டார்.

ஏனெனில் மூன்றாவது முறையாக ஒரு நபருக்கு பரிசு விழுந்துள்ளதை நினைத்து அவரே பெரும் ஆச்சரியத்திலும், இதை நம்புவதில் கடினமாக இருந்ததாக கூறியுள்ளார்.

வீட்டை மேம்படுத்துவதற்கு, இந்த பரிசுத் தொகையை அவர் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளுர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர் வாங்கிய தன்னுடைய லொட்டரியில் அவர்களின் அஞ்சல் குறியீடை அடிப்படையாக வைத்து வாங்கியுள்ளனர். அதில் இவர்களுக்கு அதிர்ஷடம் அடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *