உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வல்லரசாக மாறியுள்ளது!

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்கள் மீண்டும் ஒரு முழுமையான ஊரடங்கிற்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக வல்லரசு என்ற பட்டம் எல்லாம் பழங்கதை. இன்றைய திகதியில், அமெரிக்கா தான் உலகின் கொரோனா வல்லரசு. என்ன செய்தாலும் கட்டுப்படாமல் கிராப் தினமும் அபாயகரமான அளவில் உயர்ந்து கொண்டே செல்கிறது. அமெரிக்காவின் முக்கியமான கலிபோர்னியா, புளோரிடா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் மக்கள் தொகை அதிகம். இந்த மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக ெகாரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே ேபாகிறது.

 இதனால், இந்த மாகாணங்களில் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமலுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிகிறது. இந்த 3 மாகாணங்களில் மட்டும் இதுவரை 8 லட்சத்து 92 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை மட்டும் ஒரே நாளில், 30 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு நாளில் உலக அளவிலான பாதிப்பில் 18 சதவீதம் ஆகும். எகிறும் கொரோனா பரவல் வேகம், அம்மாகாண ஆளுமைகளை கதிகலக்கியுள்ளது. பரவல் வேகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், கலிபோர்னியா மாகாணத்தில் ஓட்டல்கள், ஒயின் தயாரிப்பு ஆலைகள், தியேட்டர்கள், பூங்காக்கள், மிருக காட்சியகங்கள் மற்றும் மதுபான கூடங்களை மூடுவதற்கான கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என கலிபோர்னியா ஆளுநர் கெவின் நியூசம் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவிலுள்ள 30 மாவட்டங்கள் ஏற்கனவே கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. நிலைமை கைமீறி விடாமல் இருக்க, இங்குள்ள உடற்பயிற்சி கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், முக்கியமல்லாத அலுவலகங்கள், சலூன், பார்கள் மற்றும் ஷாப்பிங் மால்களையும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற நிலையை நோக்கி செல்ல வேண்டியிருப்பதாக ஆளுநர் நியூசம் தெரிவித்துள்ளார். இந்த முழுமையான ஊரடங்கு நிலை கொரோனாவை கட்டுப்படுத்தும் வரை தொடரலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *