விமானத்தின் லேண்டிங் கியருக்குள் ஒளிந்து பயணித்த நபர்!

விமானத்தின் லேண்டிங் கியருக்குள் சுமார் 26 வயது மதிக்கத்தக்க நபர் ஒளிந்து வந்திருக்கும் சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கடந்த சனிக்கிழமை Guatemala-வில் இருந்து Miami-க்கு புறப்பட்டுள்ளது. விமானம் சரியாக இரண்டரை மணி நேர பயணத்தை தொடர்ந்து, Miami விமானநிலையத்தில் சரியாக உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு தரையிரங்கியுள்ளது.

அப்போது விமானத்தின் லேண்டிங் கியருக்குள் (விமானத்தை இறக்க உதவும் சக்கரம்) Guatemala-வைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க நபர் பதுங்கியிருப்பது அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.

சுமார் இரண்டரை மணி நேர பயணம், விமானம் சராசரியாக 30,000 மற்றும் 42,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும், அப்போது வெப்பநிலை -54 F-வுக்கும் குறையாமல் இருந்திருக்கும், ஆக்ஸிஜன் அளவு குறைந்திருக்கும்.

இதை எல்லாம் தாண்டி அவர் எப்படி வந்தார் என்ற ஆச்சரியம் அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவர்களை அழைத்த அதிகாரிகள் அவரை பரிசோதித்துள்ளனர். அவருக்கு எந்த ஒரு காயமும் அந்தளவிற்கு ஏற்படவில்லை. அதன் பின் அவர் அங்கிருக்கும் உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

யார் அவர்? எப்படி இங்கே பதுங்கினார் என்பது குறித்த எந்த ஒரு விபரமும் வெளியாகவில்லை. விமான நிறுவனமும், இது குறித்து எந்த ஒரு தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *