துப்பாக்கி முனையில் படகில் ஏற்றப்பட்ட மணப்பெண் விபத்தில் உயிரிழப்பு!

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றபோது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த முதல் புலம்பெயர்வோர் குறித்த துயர செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

உறுதி செய்யப்பட்ட தகவலின்படி, உயிரிழந்த முதல் நபர் Mariam Nouri Dargalayi (24) என்ற ஈராக்கைச் சேர்ந்த மாணவி. அவருக்கு பிரித்தானியாவில் வாழும் Karzan Asad என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தன் வருங்காலக் கணவனுடன் இணைந்துகொள்வதற்காக Mariam அபாயகரமான வகையில் படகில் பயணித்துள்ளார்.

பிரான்சிலிருந்து இரண்டு படகுகளில் சுமார் 50 புலம்பெயர்வோர் பிரித்தானியாவை நோக்கிப் புறப்பட இருந்த நிலையில், திடீரென ஒரு படகு பழுதாகியுள்ளது. அந்த படகிலிருந்தவர்களை பிறகு வேறொரு படகில் அனுப்புவதற்கு பதிலாக, பணத்தாசை பிடித்த கடத்தல்காரர்கள், அளவுக்கு அதிகமானவர்களை ஒரே படகில் ஏற்றியுள்ளார்கள்.

கூட்டமாக இருப்பதாகக் கூறி படகில் ஏற மறுத்தவர்களை துப்பாக்கியைக் காட்டி படகில் ஏறாவிட்டால் சுட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார்கள் கடத்தல்காரர்கள்.

அப்படி, மிரட்டப்பட்டு படகில் ஏற்றப்பட்டவர்களில் Mariamம் ஒருவர்.

ஈராக்கிலிருந்து ஜேர்மனி வழியாக பிரான்சை அடைந்த தனது வருங்கால மனைவிக்காக காத்திருந்த Karzan, சுமார் 4 மணி நேரம் அவருடன் மொபைலில் தொடர்பிலிருந்திருக்கிறார். பாதி வழியில் தொடர்பு அறுந்திருக்கிறது.

அதற்குப் பின், வருங்கால மனைவிக்கு பதிலாக, அவரது உயிரிழந்த தகவல் மட்டுமே Karzanஐ வந்தெட்ட, சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார் அவர்…

ஈராக்கிலோ அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு மரணம் யாருக்குமே வரக்கூடாது என்கிறார் Mariamஉடைய நெருங்கிய தோழியான Imann Hassan. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *