உலகிலேயே அதிக வேகமாக செல்லும் எலெக்ட்ரிக் விமானம்!

இன்றைய நவீன உலகில் பெட்ரோல், டீசல் உயர்வால் பலரும் எலெக்ட்ரிக் வாகனத்துக்கு மாற தொடங்கி இருக்கிறார்கள். அதிலும், சக்கப்போடு போடும், ஓலா ஸ்கூட்டர் மற்றும் ரிவால்ட், ஏத்தார், சிம்பிள் ஒன் போன்ற ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

அதேப்போல், எலெக்ட்ரிக் கார் வகைகளிலும் விற்பனையை பல நிறுவனங்கள் தொடங்கி இருக்கிறது. அதெல்லாம் போக தற்போது எலெக்ட்ரிக் அதிவேக விமானத்தை பிரபல நிறுவனம் தயாரித்து உலக சாதனை படைத்திருக்கிறது.

இந்த ரோல்ஸ் ராய்ஸ் எலெக்ட்ரிக் விமானமானது, ஏறக்குறைய 3 கிமீ-கள் தொலைவிற்கு 555.9kmph என்ற அதிகப்பட்ச வேகத்தில் சென்றதினால் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்ப்ரிட் ஆஃப் இன்னோவேஷன் உலகின் வேகமான எலக்ட்ரிக் வாகனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சீமென்ஸ் இ-விமானம் 2017-ல் அதிகப்பட்சமாக 213.04 kmph வேகத்தில் சென்றதே இதற்குமுன் சாதனையாக இருந்தது. இந்த ரோல்ஸ் ராய்ஸ் விமனாம் 202 வினாடிகள் எடுத்துக்கொண்டு, 60 வினாடிகளில் 3000 மீட்டர் தூரத்திற்கு சென்ற சாதனையையும் இது முறியடித்துள்ளது.

இந்த சோதனை ஓட்டத்தில் ஸ்ப்ரிட் ஆஃப் இன்னோவேஷன் எட்டிய மிக அதிகப்பட்ச வேகம் 623kmph ஆகும். இதில் ஸ்பெஷலாக இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் ஆற்றல், அடர்த்தி மிகுந்த உந்துவிசை பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், இதன் பேட்டரியின் ஆற்றலை பயன்படுத்தி கிட்டத்தட்ட 250 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியுமாம். இவ்வாறு அதிவேகமான மற்றும் விலையுயர்ந்த வாகனங்களை வடிவமைப்பதை எப்போதுமே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனி தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *