நானும் இத்தகைய ஏமாற்றங்களை சந்தித்திருக்கிறேன் இம்ரான் கான்ஆறுதல்!

டி20 உலகக்கோப்பை 2021-ல் ஆரோன் பிஞ்ச் தலைமை ஆஸ்திரேலியா, பாபர் ஆசம் தலைமை பாகிஸ்தானை அரையிறுதியில் வென்று இறுதியில் நியூசிலாந்தை சந்திக்கிறது. பாகிஸ்தான் தோல்வி அந்த ரசிகர்களுக்கு வேதனை அளித்தாலும் இந்தத் தொடரில் பிரமாதமாக ஆடியதற்காக தலை நிமிர்ந்து நடப்போம் என்று பிரதமர் இம்ரான் கான் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தோல்விக்கு ஆறுதல் தெரிவித்த அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், “பாபர் ஆசம் மற்றும் அணிக்கு: இப்போது நீங்கள் என்ன உணர்வீரர்கள், என்ன மனநிலையில் இருப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. கிரிக்கெட் களத்தில் இதே போன்ற ஏமாற்றங்களை நானும் சந்தித்திருக்கின்றேன். ஆனால் நீங்கள் ஆடிய தரமான கிரிக்கெட்டை எண்ணி பெருமைப்படுங்கள். வெற்றி பெறும்போது நீங்கள் காட்டிய தன்னடக்கத்தை நினைத்துப் பெருமைப் படுங்கள். ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துக்கள்” என்று இம்ரான் கான் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங், “மேத்யூ வேடிடமிருந்து ஸ்பெஷல் இன்னிங்ஸ். மேட்ச்களை வெற்றி பெற வைப்பது கேட்ச்கள் தான். கேட்சை விட்டால் அதற்கான பெரிய விலையை சில சமயத்தில் கொடுக்க வேண்டி வரும். துரதிர்ஷ்டம்தான், பாகிஸ்தான் தொடரில் பிரமாதமாக ஆடிவந்தனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு வாழ்த்துக்கள், ஞாயிறன்று பொறிபறக்கும் போட்டி காத்திருக்கிறது” என்றார்.

சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “பாகிஸ்தான் சில நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் ஆஸ்திரேலியா அணி கடைசி 5 ஓவர்களில் வலுவாக மீண்டெழுந்தனர். ஆட்டத்தை வலுவாக முடித்தனர். ஸ்டாய்னிஸ் இன்னிங்ஸ் அவர்களுக்கு வெற்றி நம்பிக்கையை பெற்றுத் தந்தது என்றால், மேத்யூ வேட் அதனை வெற்றியாகவே மாற்றி இறுதிக்கு ஆஸ்திரேலியாவை இட்டுச் சென்றார்”, என்றார்.

விவிஎஸ் லஷ்மண், “வாவ் ஆஸ்திரேலியா வாவ்! மேத்யூ வேட் என்னமா ஆடிவிட்டார். இது பாகிஸ்தான் வெல்ல வேண்டிய போட்டி, ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பை மறுக்க முடியாது. ட்ரான்ஸ் டாஸ்மேனியன் ரைவல்ரியைப் ஞாயிறன்று பார்ப்போம், முதல் முறையாக சாம்பியன் ஆகும் அணி உறுதியாகி விட்டது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *