சீனாவை அடுத்து தென்கொரியாவில் தீயாய் பரவும் கொரோனா!

கொரோனா வைரஸ் ஆனது பல நாடுகளில் குறைந்தாலும், சீனாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது.

அதன்படி, கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக 6 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து இருக்கிறது.

அதிலும், கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 5,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீனாவை தொடர்ந்து தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,00,000 க்கும் மேற்பட்ட கொரானா தொற்று பாதிப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென் கொரிய கட்டுப்பாடு நிறுவனம் தெரிவிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் 4,00,741 புதிய கொரானா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இவை கடந்த ஆண்டு ஜனவரியில் நாடு தனது முதல் கொரானா வழக்கைப் பதிவு செய்ததிலிருந்து மிக அதிகம்.

இதன் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது தற்போது 7,629,275 ஆக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளது. இறப்புகள் மட்டுமே 293 ஆக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *