உலகிலேயே முதல்முறையாக ‘காலநிலை மாற்றத்தால்’ பாதிக்கப்பட்ட நோயாளி!

கனடாவைச் சேர்ந்த 70 வயதான பெண்மணி, உலகிலேயே ‘காலநிலை மாற்றத்தால்’ பாதிக்கப்பட்ட முதல் நோயாளியாக கண்டறியப்பட்டுள்ளார்.

அப்பெண்ணின் உடல்நிலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட கொடிய வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டதாக, இவருக்கு சிகிச்சையளிக்கும் Kootenay Lake மருத்துவமனையின் மருத்துவர் Kyle Merritt தெரிவித்தார்.

BC Wildfire Service இணையதளத்தின்படி, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள Kootenays பகுதியில் இந்த நிதியாண்டில் 1,600 காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன.

மருத்துவர் கைல் மெரிட் பாதிக்கப்பயட்ட பெண் குறித்து கூறுகையில், அந்த பெண்மணியின் உடல்நலம் முழுவதுமாக மோசமடைந்துவிட்டன, அவரது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க மிகவும் சிரமப்படுகிறார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் ஒருவரை எப்படி குளிர்விப்பது என்று நாங்கள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது என்று தெரிவித்தார்.

கனடாவிலும், அமெரிக்காவின் சில பகுதிகளிலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதிவான வெப்ப அலைகள் நூற்றுக்கணக்கான இறப்புகளுக்கு காரணமாக இருந்தன.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்பம் காரணமாக இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர்.

வானிலை ஆய்வாளர்கள் வடமேற்கில் உள்ள உயர் அழுத்தத்தின் குவியும் நிலையால் இந்த கடும் வெப்ப அலைகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர், இது மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் மோசமடைந்தது.

வெப்ப அலைகள் குவியும் நிலையைத் தூண்டியது எது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மிக அதிக வெப்பநிலை அல்லது ஈரப்பத நிலைகள் மனிதனுக்கு வெப்ப பக்கவாதம் அல்லது வெப்ப சோர்வு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது.

அதிகளவான நோயாளிகள் வெப்ப பக்கவாதம் மற்றும் பிற வெப்பம் தொடர்பான நோய்களுடன் வருவதால், இப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *