தடுப்பூசி போட்டுக் கொண்ட இளம் பெண் கோடீஸ்வரர் ஆனார்!

ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக 25 வயது இளம்பெண்ணான Joanne Zhu 1 மில்லியன் டொலரை பரிசாக வென்றுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும், தன் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடக்கிவிட்டுள்ளன.

மக்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இலவசங்கள் என பரிசுகளை அறிவித்தும் மக்களை அரசாங்கம் ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 1 மில்லியன் லொட்டரி பரிசை அறிவித்தது The Million Dollar Vax Alliance.

இந்த லொட்டரியில் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் பதிவு செய்திருந்த போதும், 25 வயதான Joanne Zhu 1 மில்லியன் டொலர் பரிசை தட்டிச்சென்றுள்ளார்.

முதலில் தான் பரிசு வென்றதை நம்ப மறுத்தாலும், பிறகு சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த பணத்தை தன்னுடைய குடும்பத்தினருக்காக செலவழித்து விட்டு, தங்களுடைய எதிர்காலத்துக்காக சேமித்து வைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதவிர சுமார் 100 நபர்களுக்கு 1000 டொலர்கள் பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *