இந்திய அணியினர் நாட்டுக்காக விளையாடுவதில்லை கபில் தேவ் தெரிவிப்பு!

இந்திய அணியில் உள்ள வீரர்கள் தேசத்துக்கு விளையாடுவதைவிட, ஐபிஎல்டி20 தொடரில் விளையாடுவதற்குதான் முன்னுரிமை தருகிறார்கள் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேதனை தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த இந்திய அணி, முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 10 விக்கெட்டில் தோற்றது, 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 8 விக்கெட்டில் வீழ்ந்தது. இந்த தோல்விக்குப்பின் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு அருகிப்போனது. நியூஸிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தும்பட்சத்தில் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்திருந்தார்கள்.

ஆனாலும், அந்த கனவையும் நியூஸிலாந்து கலைத்துவிட்டு, ஆப்கனை தோற்கடித்து அரையிறுதி்க்கு தகுதி பெற்றது. இந்திய அணி அரையிறுதிக்குள் செல்லாமல் வெளியேறுகிறது. இந்நிலையில் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியதாவது: தேசத்துக்காக விளையாடுவதைவிட, ஐபிஎல் தொடரில் விளையாடத்தான் வீரர்கள் முன்னுரிமை கொடுக்கும்போது, நாம் என்ன செய்ய முடியும்.

தேசத்துக்காக விளையாடுவதை வீரர்கள் பெருமையாக நினைக்க வேண்டும். வீரர்களின் நிதிநிலைமை பற்றி எனக்குத் தெரியாததால், என்னால் பெரிதாகஏதும் கூற முடியாது. ஐபிஎல்டி20 தொடர் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு நெருக்கமாக வந்தது. இதுபோன்ற நேரத்தில் பிசிசிஐ நன்கு தி்ட்டமிட்டிருக்க வேண்டும்.நான்ஐபிஎல் டி20 நடத்தாதீர்கள், வீரர்கள் விளையாடாதீர்கள் என்று கூறவில்லை. ஆனால், திட்டமிடலை சரியாகச் செய்யவேண்டிய பொறுப்பு பிசிசிஐக்கு இருக்கிறது.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் நாம் மிகப்பெரிய தவறு செய்து பாடம் கற்றோம் ஆதலால், மீண்டும் தவறு நடந்துவிடக்கூடாது. வீரர்களுக்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை விளையாட வைத்திருக்க கூடாது. ஐபிஎல் 2-வது சுற்று முடிந்தபின், டி20 உலகக் கோப்பைக்கு சிறிய இடைவெளியே இந்திய அணி நிர்வாகம் அளித்திருக்க வேண்டும். எதிர்காலத்தை கவனிக்க இது சரியான நேரம். சரியான திட்டமிடலைத் தொடங்க வேண்டும். உலகக் கோப்பை முடிந்தவுடன், இந்திய அணியின் கிரிக்கெட்டே முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. அனைவரும் அமர்ந்து திட்டமிடுங்கள். இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *