இறப்பதற்கு முன்பு புனித் ராஜ்குமாரின் கடைசி சில நிமிடங்கள்!

நடிகர் புனித் குமார் இறப்பதற்கு முன்பு சில நிமிடங்கள் எவ்வாறு அவரது உடல்நிலை காணப்பட்டது என்பதை அவரது குடும்ப மருத்துவர் கூறியுள்ள தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புனித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் பிரிவை தாங்க முடியாத மக்கள் மீளா துயரத்தில் கண்ணீருடன் காணப்படுகின்றனர்.

இவரது மரணத்திற்கு முன்பு 2 மணிநேரம் என்ன நடந்தது என்பதை புனித்தின் குடும்ப மருத்துவர் கூறியுள்ளார்.

புனித் முதல்நாள் நள்ளிரவில் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு வந்துள்ளார். வந்ததும் படுக்கைக்கு சென்ற அவர் காலையில் தாமதமாகவே 9 மணிக்கு எழுந்துள்ளார்.

மனைவியிடம் சோர்வாக இருப்பதாக கூறிய அவர் பின்பு காலை கடன்களை முடித்துவிட்டு வீட்டில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார். 9.50 மணியளவில் மனைவியிடம் சோர்வாகவும், சிறிது நெஞ்சுவலிப்பதாகவும் கூறியதையடுத்து மனைவி அஸ்வினி குடும்ப மருத்துவரிடம் அழைத்து வந்துள்ளார்.

நேற்று காலை 10.30 மணியளவில் மருத்துவமனைக்கு வந்த புனித்திற்கு அதிகமாக வியர்த்துள்ளது. மருத்துவர் வியர்வையைக் குறித்து கேட்டதற்கு புனித் உடற்பயிற்சி முடித்துவிட்டு நேரடியாக இங்கு வருகிறேன். ரொம்ப சோர்வாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறு மருத்துவரிடம் தனக்கு சோர்வாக இருப்பதாக ஒரு நாள் கூட கூறாத புனித், அன்றைய தினம் கூறியது மருத்துவரை சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

உடனே இ.சி.ஜி பரிசோதனை செய்ததில் அவரது இதயத்துடிப்பு நன்றாக இருந்த நிலையில், சிறிது மாறுபாடு ஏற்பட்டுள்ளதை அறிந்த மருத்துவர் உடனே விக்ரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கோரியுள்ளார்.

மருத்துவர் கூறிய அடுத்த 5 நிமிடத்தில் விக்ரம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் புனித். புனித் குறித்த மருத்துவமனையை விட்டு செல்லும் போது நடந்து சென்றதாகவும், மனைவி காரில் அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பரிசோதனை முடிந்து மயக்கநிலைக்கு அவர் செல்லவில்லை என்றும் சிறிது நடப்பதற்கு மட்டுமே சிரமப்பட்டார்… வலிக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் இது மாரடைப்பு இல்லை… கார்டியாக் அரெஸ்ட் அதாவது இதயத்தின் முடிப்பே நின்று விட்டது என்று கூறியுள்ளார்.

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்ட அவர் விக்ரம் மருத்துவமனைக்கு செல்வதற்கு காரில் ஏறும் போது கூட நன்றாக இருந்தார். பின்பு காரில் செல்லும்போது தான் அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த குடும்ப மருத்துவர் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *