விமல் அணியினருக்கு கன்னம் பழுக்கும் வரை தாக்குதல் நடத்துவோம் ஆளும் தரப்பு எச்சரிக்கை!

விமல் வீரவங்ச போன்றவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களை விமர்சிக்க தயாராகினால், அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் கன்னத்தில் அறைய தயார் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி(Tissa kutti arachchi) தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் பதவிகளை வகித்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதை விட, முதுகெலும்பு இருக்குமாயின் அரசாங்கத்தின் பதவிகளில் இருந்து விலகி, அரசாங்கத்தை விமர்சிக்குமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைவர்களின் பின்புறத்தை எட்டி உதைக்க முயற்சிக்கும் நபர்களுக்கு கன்னம் பழுக்கும் வகையில் தாக்குதல் நடத்த பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றனர் எனவும் குட்டியராச்சி குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் கொழும்பில் நடத்திய கூட்டம் ஒன்றில் அமைச்சர் விமல் வீரவங்ச வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமெரிக்க நிறுவனத்திற்கு இலங்கையில் எரிவாயு விநியோகிக்கும் ஏகபோக அதிகாரத்தை வழங்கும் நடவடிக்கைக்கு எதிராக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 சிறிய கட்சிகள் நேற்று முன்தினம் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *