ஷாருக்கான் இஸ்லாமியர் என்பதால் குறிவைக்கப்படுவதற்கு சீமான் கண்டனம்!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் இஸ்லாமியர் என்பதாலேயே அரசதிகாரம் அவர் மீது குறிவைக்கிறது என கடும் கண்டனத்தை நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

ஆர்யன் கானை பிணையில் விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, போதை விருந்துக்கு அனுமதியளித்த கப்பல் நிர்வாகத்தின் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்ற கேள்வியை சீமான் எழுப்பியுள்ளார்.

அதானி குழுமத்திற்கு சொந்தமான துறைமுகத்திலிருந்து பலகோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் ஆர்வம் காட்டாத அரசு, ஆர்யன் கான் விவகாரத்தில் அதீத கவனம் செலுத்துவது ஏன் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ள சீமான், மதத்தை அளவீடாக வைத்து செயல்படும் பாஜகவின் இச்செயல் வெட்கக்கேடானது என தனது வன்மையான கணடனத்தை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *