பாத்திரத்தை படகாக மாற்றி நடந்த அதிசய திருமணம்!

கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அங்கு நடைபெற்ற திருமணம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆலப்புழா: கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், வீடுகள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆலப்புழா சேர்ந்த ஆகாஷ், ஐஸ்வர்யாவுக்கு இன்று (அக்.18) திங்களன்று திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர்.

இவர்களின் திருமணம் தளவாடி பனையண்ணூர்காவு தேவி கோயிலில் நடைபெற இருந்தது. ஆனால் கனமழை காரணமாக கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.திருமண நடைபெறும் இடத்திற்கு செல்ல மணமக்கள், மற்றும் குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து மணமக்களை பெரிய வெண்கல பாத்திரத்தில் ஏற்றி படகாக மாற்றி வெள்ளத்தில் அரை கிலோ மீட்டர் அழைத்து சென்று திருமணத்தை நடத்தி முடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *